சமீபத்தில்
ஷட்டகர் வீட்டுக்கு போன போது இதை பார்த்தேன். எப்பவுமே மெகானிகல் சமாசாரத்தில
ஆர்வம் உண்டு. இதை எப்படி சுத்த விடறதுன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு
கண்டுபிடிச்சேன். முன்னே இது போல பார்த்தது இல்லை. கான்சப்ட் ரொம்ப பிடிச்சு
போச்சு!
மேலே தெரியற
கருப்பு குமிழும் கீழே இருக்கற கருப்பு சிவப்பு யூனிட்டும் ஒரே பீஸ். அந்த வெள்ளை
தண்டு இணைக்குது. நடுவில இருக்கிற மஞ்சள் ரிங் தனியா சுத்தும். இந்த நூலை சுருட்டி விட்டு
மஞ்சள் ரிங்கை மட்டும் பிடிச்சுக்கொண்டு நூலை வேகமா இழுத்தா பம்பரம் சுத்த ஆரம்பிச்சுடும்.
மெதுவா தரையில இறக்கிவிடலாம். வேகமா இழுத்தா அதுவே அந்த நூலை மறு பக்கமா உள்ளே
இழுத்து சுருட்டிக்கும்! க்ளவர் எஞ்சினீரிங்!
No comments:
Post a Comment