Showing posts with label கோடை மழை!. Show all posts
Showing posts with label கோடை மழை!. Show all posts

Sunday, June 30, 2013

கோடை மழை! -2


வருணபகவான் கூகுள் ப்ஸ்ஸையோ என் ப்ளாக்கையோ படிக்கறார் போலிருக்கு!
முந்தா நேத்து ப்ளஸ்ல மழை பத்தி எழுதினது அவருக்கு தெரிஞ்சுடுத்து. அப்படியா சொன்னே? பாத்துக்கன்னு கருவி இருக்கணும். போஸ்ட் போட்ட கொஞ்ச நேரத்திலேயே ஜன்னல் கதவை சாத்த வேண்டியதா போச்சு! தூறல் அதிகம். அப்புறம் தூறல் மழையாவே ஆகி கிட்டத்தட்ட அரைமணி பெஞ்சது. மானம் உறுமோ உறுமுன்னு உறுமிகிட்டு இருந்தது! கொஞ்சம் மின்னலும். நேத்தி ஐஎம்டி சைட்ல பாத்தா 16 மிமீ ன்னு போட்டிருக்கு.
அதை நான் கண்டுக்கலையாம்! அதுக்காக நேத்து ராத்திரி ஒன்பது மணி அளவில சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழையாவே பொழிஞ்சு தள்ளிட்டார்! எப்படியும் 20 மிமீ க்கு மேல இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
மிஸ்டர் வருண பகவான்! தாங்க்ஸ் சொல்லற அதே நேரம் நக்கீரன் பரம்பரை மாதிரி குற்றம் குற்றமேன்னு சொல்லி வெக்கறேன். இந்த சீசனுக்கு இடி மின்னலோட குறைந்த நேரத்துல அதிக மழைதான் இருக்கணும். இப்படி அப்பசி மாசம் மாதிரி நின்னு பெய்யறதில்லே!

சரி இன்னைய படம் வீடு கட்டறப்ப பார்க்க வேண்டிய ஒரு சமாசாரத்துக்காக. சுமார் 30 வருஷம் முன்னே வீடு கட்டினப்ப மேஸ்த்ரி டிசைன்தான். அவர் வீட்டு முன் பக்கம் 'வெளிவேஷன்' நல்லா இருக்கணும்ன்னு இப்படி பொட்டி மாதிரி கட்டிப்புட்டார்




ட்ரெய்ன்னுக்கு ஒரு இஞ்ச் பைப். அப்பவே போதுமான்னு கேட்டேன். நிச்சயமா போதும் சார்ன்னார். போதும்தான்... அதுல எதுவும் புகுந்து அடைக்காத வரை. என்ன ஆகும்ன்னா இலை சத்தை புழுதி எதாவது விழுந்து அது அடைபடும். நீச்சல் பழக விருப்பம் இல்லைன்னா, ஞாபகமா மழை பெஞ்ச அடுத்த நாள் இதை குத்தி க்ளியர் பண்ணனும்! 





Thursday, June 27, 2013

கோடை மழை!


கோடை மழை!
எங்கூருக்கு முக்கியமான மழை ஐப்பசி கார்த்திகைதான். நின்னு நிதானமா அஞ்சாறு நாள் பெய்யும். குறைஞ்சது நச நச தூறலாவது இருக்கும். கோடை மழை வேற மாதிரி.
வழக்கமா பகல்ல நல்ல வெயில் இருக்கும். சாயந்திரம் தென் மேற்கில மேகங்கள் கூடும். ஆனா அனேகமா மழை வராது. பண்ணுருட்டில வெளுத்து வாங்கும். மேக்சிமம் எங்கூருக்கு 5 கி.மீ மேற்கே பெய்யும். ஆனா கடலோரம் இருக்கிற எங்கூருல அனேகமா மழை பெய்யாது. இந்த பெய்யாது என்கிற பாசிபிலிடி வருஷா வருஷம் அதிகமாகிகிட்டே போகுது.
வாரம் ஒரு நாள் மழை பெஞ்சுடும். வழக்கமா ஒரு 10 -15 நிமிஷம்தான். ஆனா அதுகுள்ள அடி பிச்சிடும். இடி மின்னல் காத்து இல்லாம மழை கிடையாது! மழை வரும் 2 நிமிஷம் முன்னே கெமிகல் பாக்டரிகளின் வாசனை வந்துடும். ஓடிப்போய் ஜன்னல் கதவெல்லாம் சாத்திட்டா பிழைச்சது. இல்லைன்னா மாடி ஹால்ல எல்லாம் தண்ணி வந்துடும். அப்படி வீசி அடிக்கும்! பத்து நிமிஷத்துல வந்த சுவடு தெரியாம காணாமப்போயிடும்!

இந்த வருஷம் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. நாள் முழுதும் மேகக்கூட்டமா இருக்கு. அதனாலேயே மதிய சூடு அதிகமா இருக்கு. சாயந்திரம் கருத்த மேகம் கொஞ்சம் வருது. அனேகமா தூறுது. லேசான தூறல் மிதமான தூறல் ரெண்டே வகைதான். இப்பக்கூட கொஞ்சம் பலமான தூறல். ஜன்னல் கதவை மூடாமலே டைப்பிகிட்டு இருக்கேன். காத்தாவது? மூச்! மின்னல் மழை மோகினி ஒண்ணுத்தையும் காணோம்! ஹும்!



Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers