சித்திரம் பேசுதடி

Friday, July 15, 2016

பம்பரமாம் பம்பரம்......

சமீபத்தில் ஷட்டகர் வீட்டுக்கு போன போது இதை பார்த்தேன். எப்பவுமே மெகானிகல் சமாசாரத்தில ஆர்வம் உண்டு. இதை எப்படி சுத்த விடறதுன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சேன். முன்னே இது போல பார்த்தது இல்லை. கான்சப்ட் ரொம்ப பிடிச்சு போச்சு!மேலே தெரியற கருப்பு குமிழும் கீழே இருக்கற கருப்பு சிவப்பு யூனிட்டும் ஒரே பீஸ். அந்த வெள்ளை தண்டு இணைக்குது.  நடுவில இருக்கிற மஞ்சள் ரிங் தனியா சுத்தும். இந்த நூலை சுருட்டி விட்டு மஞ்சள் ரிங்கை மட்டும் பிடிச்சுக்கொண்டு நூலை வேகமா இழுத்தா பம்பரம் சுத்த ஆரம்பிச்சுடும். மெதுவா தரையில இறக்கிவிடலாம். வேகமா இழுத்தா அதுவே அந்த நூலை மறு பக்கமா உள்ளே இழுத்து சுருட்டிக்கும்! க்ளவர் எஞ்சினீரிங்!


Sunday, March 13, 2016

புலரும் காலைப்பொழுது


நான் வசிக்கும் இடத்தில் மாசி- பங்குனி மாதங்கள் போட்டோ எடுப்பவருக்கு மிகவும் சாதகம். காலையும் மாலையும் சூரியன் வானில் இறைக்கும் வண்ணஜாலம்....February and March are a photographer’s delight in our part of the globe! The setting sun as well as the rising sun cast a gamut of colors on the sky that is simply so beautiful to watch!

Monday, May 4, 2015

பாதிரி மலர்கள்


எங்கள் ஊரின் பகுதியான திருப்பாதிரிப்புலியூர் பெயர் வரக்காரணமே அந்த பகுதி ஒரு காலத்தில் பாதிரி வனமாக இருந்ததுதான். வழக்கம் போல மனிதன் போகும் இடமெல்லாம் நாசம் என்பதை மெய்ப்பித்து மிஞ்சியது கோவிலில் இருந்த ஒரு தல மரமே. அதுவும் ஒரு கும்பாபிஷேக காலத்தில் காயம் பட்டு பித்தளை உறையிடப்பட்டது. இது வரை அதன் வடிவை நான் பார்த்ததில்லை. உள்ளே எதுவும் இருக்கிறதா என்று கூட தெரியாது!

இயற்கைக்கு ஒரு சான்ஸ்….  ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கள்! அது புதுப்பித்துக்கொண்டு விடும்! மரம் இருந்த இடத்தில் இருந்து சுமார் 40 அடி தொலைவில் மதிலுக்கு வெளியே பாதிரி மரம் ஒன்று வளரத்தொடங்கியது. இரண்டு வருடங்களாக பூக்கிறது. ப்ரமோத்ஸவம் நடக்கும் சித்திரை வைகாசிதான் அதற்கான காலம். புராணத்தில் 32 வகை பூக்கள் ஒரே மரத்தில் பூப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போது காணக் கிடைப்பது மூன்று வகைகள். இப்போது ஒரு வகையின் படங்கள் கிடைத்தன. அதி காலையிலேயே பூத்துவிடும். அன்பர் ஒருவர் தினசரி பூப்பறித்து ஸ்வாமிக்கு மாலையாக கட்டிக்கொடுத்து கைங்கர்யம் செய்து வருகிறார். நண்பர் ஒருவரை படமெடுத்துத்தரச்சொல்லி கிடைத்த படங்கள் இதோ!
படங்களை சேமித்துள்ள கூகுள் ட்ரைவில் பெரியதாக பார்க்க மேலே ’இதோ’ வை சொடுக்கவும்!


Thursday, November 28, 2013

அவள் பறந்து போனாளே! (புல்புல்)


இன்னைக்கு மதியம் வீட்டுக்குள்ள நுழைந்து மாடி ஏறும் போதே நினைச்சேன், என்னடா சத்தமே காணோம்ன்னு. படியில பறவை எச்சம் பார்த்ததும் நிச்சயமாயிடுத்து. உறுதி செஞ்சுக்க கைபேசியால போட்டோ எடுத்தேன். கூடு காலி!
 Photo
ரெண்டு நாளாவே இதுக சத்தம் அதிகமா இருந்தது. முன்னே வெளியிலேந்து கத்தும். இப்ப ரெண்டு நாளா ஆள பாத்தா ஜன்னல் மேல வந்து உக்காந்து கத்திகிட்டு இருந்ததுங்க.
ஏழெட்டு வருஷம் முன்ன இந்த பறக்க கத்துக்கொடுக்கற ப்ராசஸ் பாத்து இருக்கேன். சுமார் நாலு மணி நேரம் ஆச்சு! தத்தி தத்தி நகந்துகிட்டு இருக்கற குஞ்சை சுத்தி சுத்தி வந்து சத்தம் போட்டு நடு நடுல புழு கொண்டு வந்து கொடுத்து ஏக அமர்க்களம். இந்த தரம் அது மிஸ் ஆகிடுத்து.
போட்டோ எடுத்துட்டு திரும்பிபாத்தா கம்பி மேல உக்காந்துகிட்டு சத்தம் போடுது. ஆனா இந்த சத்தம் முன்ன மாதிரி இல்லை. சரி தாங்க்ஸ் சொல்லுது போல இருக்குன்னு நினைச்சுண்டேன்!
PhotoPhoto
போகட்டும்!  இது குட்பை இல்லை. ‘அ ரெவார்’ தான்! குட் லக் கண்களா!

முந்தைய பதிவுக்குப்பின் எடுத்த படங்கள்:
https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5948966711115903601
 https://plus.google.com/photos/115022468360331789897/albums/5949607768036092321
https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5949695039454863153
 https://plus.google.com/u/0/photos/115022468360331789897/albums/5950486350763508321

Thursday, November 7, 2013

புல்புல் கூடு, முட்டைகள்.

வீட்டில முதல் மாடிக்கு போற வழில இந்த மான் கொம்பு இருக்கு. இந்த புல்புல் எப்பவுமே இதுலதான் கூடு கட்டற வழக்கம். திருப்பி கட்டி முட்டைகளும் இட்டாச்சு. சும்மா இருக்க வேண்டியதுதானே? யார் எப்ப இந்த வாசலை கடந்து போனாலும் உடனே பறந்துப்போய் ஜன்னல்ல உக்காந்துகிட்டு லபோ திபோன்னு கூச்சல்! தாங்கலை!


[Image]

[Image]

updated 12-11-2013

Tuesday, October 1, 2013

நெரூர் விசிட்....

 காவேரில தண்ணி வருதேன்னு ஆசையா நெரூருக்கு போன பிறகு கொஞ்சம் வருத்தமே ஏற்பட்டது! வேறென்ன, பக்கத்துல மணல் க்வாரி வந்தாச்சு!

 வழில ஓடையில் பூச்சிகள் .... சரியா எடுக்கலை!


 பக்கத்துல குடி தண்ணீர் திட்டத்து பம்ப் இருக்கறதால கொஞ்சம் தண்ணி அந்தப்பக்கம் திருப்பி விட்டு இருக்காங்க. இந்த 3 பைப் வழியாத்தான் வருது.
 போதாக்குறைக்கு இன்னொரு பம்புக்கு ஏற்பாடு நடக்குது. பேத்தி கோவில் கட்டி பூஜையும் பண்ணிட்டா!

Thursday, August 8, 2013

கொள்ளிடம். மழை!

நேற்று ஸ்ரீரங்கம் போயிருந்தேன். கொள்ளிடத்தில் பாயும் வெள்ளத்தை கண்டு ரசித்தேன்! ஓடும் வண்டியிலிருந்து பிடித்த படம்!

திரும்பும் போது மழையுடன் கண்ணாமூச்சி ஆடினோம்! பெரம்பலூர் தாண்டிய பிறகு தூரத்தில் மழையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது! கடலூர் வரும் வரை விட்டு விட்டு கடும் மழையில் சாலை கூட தெரியாமல் போவதும் பத்து நிமிஷத்தில் சுத்தமாக காய்ந்த ரோடில் பயணிப்பதுமாக மாறி மாறி... ஊருக்கு வந்ந்து சேர்ந்தால் துளிக்கூட மழை இல்லை! அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து துவங்கி விடியும் வரை பெய்து இருக்கிறது!

படங்கள்:Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers