Monday, May 4, 2015

பாதிரி மலர்கள்


எங்கள் ஊரின் பகுதியான திருப்பாதிரிப்புலியூர் பெயர் வரக்காரணமே அந்த பகுதி ஒரு காலத்தில் பாதிரி வனமாக இருந்ததுதான். வழக்கம் போல மனிதன் போகும் இடமெல்லாம் நாசம் என்பதை மெய்ப்பித்து மிஞ்சியது கோவிலில் இருந்த ஒரு தல மரமே. அதுவும் ஒரு கும்பாபிஷேக காலத்தில் காயம் பட்டு பித்தளை உறையிடப்பட்டது. இது வரை அதன் வடிவை நான் பார்த்ததில்லை. உள்ளே எதுவும் இருக்கிறதா என்று கூட தெரியாது!

இயற்கைக்கு ஒரு சான்ஸ்….  ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கள்! அது புதுப்பித்துக்கொண்டு விடும்! மரம் இருந்த இடத்தில் இருந்து சுமார் 40 அடி தொலைவில் மதிலுக்கு வெளியே பாதிரி மரம் ஒன்று வளரத்தொடங்கியது. இரண்டு வருடங்களாக பூக்கிறது. ப்ரமோத்ஸவம் நடக்கும் சித்திரை வைகாசிதான் அதற்கான காலம். புராணத்தில் 32 வகை பூக்கள் ஒரே மரத்தில் பூப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போது காணக் கிடைப்பது மூன்று வகைகள். இப்போது ஒரு வகையின் படங்கள் கிடைத்தன. அதி காலையிலேயே பூத்துவிடும். அன்பர் ஒருவர் தினசரி பூப்பறித்து ஸ்வாமிக்கு மாலையாக கட்டிக்கொடுத்து கைங்கர்யம் செய்து வருகிறார். நண்பர் ஒருவரை படமெடுத்துத்தரச்சொல்லி கிடைத்த படங்கள் இதோ!
படங்களை சேமித்துள்ள கூகுள் ட்ரைவில் பெரியதாக பார்க்க மேலே ’இதோ’ வை சொடுக்கவும்!






6 comments:

வல்லிசிம்ஹன் said...

aRUMAI. AZHAGU POOKKAL tHAMBI vASUDHEVAN

ராமலக்ஷ்மி said...

படங்கள் திறக்கவில்லையே :(.

Geetha Sambasivam said...

403. That’s an error.

Your client does not have permission to get URL /Jj49ff8bYnmyLqRa2p-Dl_4lWkhLgv1_TNfBcFvaDSPE498Gdab5A09zA2KcZyolwShG5r1CRvPJEXsCvKlj5GKTz9k=s400 from this server. (Client IP address: 117.207.122.63)

Forbidden That’s all we know.

திவாண்ணா said...

அவை கூகுள் ட்ரைவில் சேமிக்கப்பட்டன. அதன் பர்மிஷனை திருத்தி இருக்கிறேன். பார்க்கவும்.

ராமலக்ஷ்மி said...

/ ’இதோ’ வை சொடுக்/கிச் சென்று பார்த்து விட்டேன்:). நன்றி.

Geetha Sambasivam said...

பார்த்தாச்சு! பதிவிலே தெரியலை! :( தனியா இதுக்குனு போய்ப் பார்க்க வேண்டி இருக்கு! :P :P

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers