Saturday, August 30, 2008

போன பதிவு -ப்ளிக்கரில் பாக்க முடியாவங்களுக்காக.

குறஞ்ச வெளிச்சத்துல பெரிசுங்க எப்படி நல்ல படங்கள் எடுக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியம். பதிவு போடுங்கன்னு சொல்லலாம். பெரிசுங்களுக்கு நேரம் இருக்கனுமே! போட்டி நடுவரா இருக்கிரதா, இல்லை பொட்டி தட்ற  வேலை பாக்கிறதா, பதிவு போடறதா?

என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு இப்படி ஒரு ஐடியா பண்ணேன். மோசமா நாலு படங்கள் எடுத்து ஏன்யா இப்படி வந்து இருக்குன்னு கேட்டா சொல்லிட்டு போறாங்க.

சரிதானே?

கீழே படங்களை பாருங்க.

இன்னிக்கு காலை காமிராவ தூக்கிகிட்டு வெளீயே போய் மேனுவல் மோட்லே வெச்சு சில படங்கள் கிளிக்கினேன். ஒரே இடத்தை வேற வேற செட்டிங்க்ல எடுக்கிறப்ப எப்படி வந்து இருக்குன்னு பாருங்க.
~~~~~~~~~~
From low light pho...



image         005
focal length     6mm
35 equivalent      38 mm
exposure time     0.017 s (1/60)
perture         f/2.8
iso          80
metering     matrix
exposure      aperture priority
---

From low light pho...


image 006
focal length     6mm
35 equivalent     38 mm
ccd width      5.71mm
exposure time     0.017 s (1/60)
aperture      f/2.8
iso         80
metering      matrix
exposure     aperture priority

--
அட என்னய்யாது. புரியலையே. ஒரே செட்டிங்க்தான் காமிக்குது. இனிமே பேப்பர் பென்சில் வெச்சுகிட்டு குறிப்பு எழுதனுமா? ஆனா அதிக வெளிச்சம் வர செட் பண்ணது எப்படி இருக்கு பாருங்க.


From low light pho...


image 007
focal length     6mm
35 equivalent   38 mm
exposure time   0.033 s (1/30)
perture        f/2.8
iso         200
metering     matrix
exposure     aperture priority

பெரிசுங்களே, காமெண்டுங்க!
வர்டா?

----
பிற்சேர்க்கை: சிவிஆர் ஹெச் ஆர் டி பண்ணுங்களேன்னு கமெண்டினார்.
செய்து பாத்தாச்சு. என்ன பட அளவுதான் ரொம்பவே பெரிசாயிடுத்து! முதல் தடவை செஞ்சு பாத்தா கோஸ்ட் இமேஜ் தெரிஞ்சது. நல்ல வேளையா அதை சரி செய்ய இன்னொரு வசதியும் போட்டோ மேட்டிக்ஸ் ல இருக்கு.

நல்லா இருக்கா?

From low light pho...
>

க்ராப் பண்ணி இதை இன்னும் நல்லாக்கலாம். ஆனா இந்த பதிவோட நோக்கம் வித்தியாசங்களை காட்டறதுதானே.

4 comments:

pmt said...

நந்து நிலா எங்கள மாதிரி பிலிக்கர் தளங்கல்லில் உள்ள படங்களை பாக்க முடியதவங்களுகாக நீங்கள் மெனக்கட்டு திரும்ப படைததுக்கு நன்றி

நாடு விட்டு நாடு போனாலும் நம்ம நாட்டு அழகே அழகுதான் கடைசி 3 படமும் பார்க்க அழாக இருக்கு அனா இதுவரை நான் HDR முயற்சித்தது இல்லை கத்துக்கணும் HDR படமும் நல்லா வந்துருக்கு

திவாண்ணா said...

நன்றி பிஎம்டி!
இந்த ஹெச்ஆர்டி - கொஞ்சம் பரிசோதனை பண்ணிட்டேன். அடுத்த பதிவில எழுதறேன்.

MSATHIA said...

//க்ராப் பண்ணி இதை இன்னும் நல்லாக்கலாம். ஆனா இந்த பதிவோட நோக்கம் வித்தியாசங்களை காட்டறதுதானே//

சொல்லாம்னு நினைச்சேன். நீங்களே போட்டுட்டீங்க. ;-)
போட்டோமேட்டிக்ஸ் பயன்படுத்துனது இல்லை. ஆர்வத்தை உண்டுபண்ணீட்டீங்க. விளக்கங்கள் அருமைங்க.

திவாண்ணா said...

நன்றி சத்யா!
அப்பப்ப வாங்க!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers