Monday, November 3, 2008

ரிமோட் டெஸ்டிங்க்.....!



இன்னிக்கு தினமலர் கம்ப்யூட்டர் மலர்லே ஒரு சுவையான செய்தி படிச்சேன்.
ரிமோட்டை எடுத்து பட்டனை அமுக்குறீங்க. எதிர்பார்த்த வேலை நடக்கலை. இப்ப அது வேலை செய்யுதா, பாட்டரி மாத்தணுமா, இல்லை டிவிடி ப்ளேயர், டிவி ல கோளாறான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?
டிஜிடல் காமெராவை எடுத்து போட்டோ எடுக்க தயாராகுங்க. மேலே படத்தில இருக்கா மாதிரி அதை போகஸ் பண்ணி ரிமோட் பட்டனை அமுக்குங்க.
ஊதா கலர் தெரிஞ்சா அது வேலை செய்யுது. இல்லைனா இல்லை.
கூல்!

Posted by Picasa

5 comments:

geethasmbsvm6 said...

முதல்லே டிஜிடல் காமிரா வாங்கிட்டு அப்புறமா பரிசோதனை பண்ணிட்டு சரியா இருக்கானு சொல்றேன். :)))))

திவாண்ணா said...

சீக்கிரமா வாங்குங்க! :-)))))

வடுவூர் குமார் said...

அட! இது புது தொழிற்நுட்பமாக தெரியுதே!

நானானி said...

அட! மொட்டைத்தலைக்கு முழங்காலுக்கும் கூட முடிச்சுப் போடலாம் போலிருக்கே!!நல்ல தகவல். ஏன்னா என் ரிமோட்டோட இதே தொல்லைதாங்க.

திவாண்ணா said...

அட! வாங்க நானானி! முதல் வருகைக்கு நன்னி!
இந்த செய்திய படிச்சப்ப அவ்வளொ ஆச்சரியம்! அதனால்தான் பதிவா போட்டேன்.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers