முதல்லே நாம சாத்வீகமான ஆசாமி என்னத்த ராஜசமா ஆக்ஷன் படம் எடுக்கிறதுன்னு விட்டுட்டேன். இருந்தாலும் ஒரு நப்பாசைல பாத்து பாத்து ஒண்ணும் தேரலை. போகட்டும் இந்த மாசம் ஒண்ணும் இல்லைன்னு பிட்ல சொல்லி மத்தவங்களை எல்லாம் தேத்தியாச்சு. ரிலாக்ஸ் பண்ணுங்க, இந்த மாசம் நான் ஆட்டல இல்லைன்னு சொல்லிட்டேன்.
அப்புரமா பாருங்க திடீர்ன்னு வெளியூர் போக வேண்டி வந்தது. காமிராவை தூக்கிகிட்டு கிளம்பியாச்சு. எடுத்த பல படங்கள் தேறலை. (சிலது மட்டும் என்னவாம்ன்னு முணு முணுக்கிறீங்க, கேக்குது! :)
ஒண்ணு ரெண்டு போட்டு இருக்கேன்; தேறுதான்னு சொல்லுங்க.
முதல் படம் வழில கரும்பு ஏத்திகிட்டு இருந்தது. கரும்பு கட்டு தூக்கி போடறப்ப எடுக்கணும்னு ஐடியா. ரெண்டாம் படத்துக்கே படம் எடுக்கிறாங்கன்னு பாத்துட்டு போஸ் கொடுக்க ஆரம்பிக்க கிளம்ப வேண்டியதா போச்சு!
From action |
+++++++++++++++++++++++++++++++++++++++
ஏதோ ஆக்ஷன் நடக்குது இல்லை?
கண்ணாலம்தான்! கோவில்ல முடிச்சு எல்லாரும் வெளியே வராங்க!
From action |
++++++++++++++++++++++++++++++++
ஒரு இடத்தில நிறுத்தி படம் எடுக்கப்பாத்து இந்த வானரம் ரொம்பவே தண்ணி காட்டிடுச்சு! எடுத்த இருபது படத்திலே இது ஒண்ணுதான் தேறிச்சு. சரின்னு விடியோ எடுத்தக்கூட அந்த பத்து செகண்ட் முதுக காட்டிகிட்டு சும்மா உக்காந்துட்டு அப்புறம் பரபரப்பா சிலது செய்யுது!
ஹும்! என்ன பண்ணறது!
From action |
+++++++++++++++++++++++++++++++
இது வேற வானரம். எடுத்த நாலுல இது ஒண்ணு கொஞ்சம் தேறிச்சு. பிக்காஸால வெளிச்சத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன்.
From action |
+++++++++++++++++++++++++++++
அப்புறம் திரும்பி வரப்ப எடுத்த கருடன். ஜூம் பண்ணி க்ராப் பண்ணேன். அள்வு சின்னதா போச்சு.
From action |
+++++++++++++++++++++++++++++++
இன்னொரு முறை எடுத்தது
From action |
அவ்ளோதான். போட்டிக்கு அனுப்பனுமான்னு யோசிக்கிறேன்!
No comments:
Post a Comment