Thursday, March 18, 2010

ஜூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........



இன்னிக்கு நார்த்தங்கா ஜூஸ் எப்படி குடிக்கிறதுன்னு பார்க்கலாமா?
மோனோ லிஸாவை கேட்டா ஏதாவது வெலாவரியா சொல்லுவாங்க.
நான் எனக்கு தெரிஞ்சபடி சொல்லறேன்.
முதல்லே நல்ல மரமா பாத்து தேர்ந்தெடுக்கணும்.

From narthangai


நல்ல பழங்கள் இருக்கா? அப்புறம் வசதியா ஒரு கிளையை பாத்து அதிலே உக்கார்ந்து கொள்ளணும். அலகால குத்தி ஒரு ஓட்டை போட்டு...அப்புறம் என்ன உறிஞ்சி குடிக்க வேண்டியதுதான்.

From narthangai

யாரும் போட்டொ எடுக்க வந்தா உடனே பறந்து போய் எங்காவது உக்காந்துக்க வேண்டியதுதான்.
என்னங்க முழிக்கிறீங்க?
அட நீங்க மனுஷ ஜாதியா? குருவி இல்லையா? சாரி. பாவம் நீங்க! ஜூஸ் வேணும்னா கடைக்கு போங்க!

From narthangai

let us see how to drink citrus juice.
select a good fruit bearing tree.
choose a convenient perch.
make a hole in the fruit.
now...what else start sucking the juice!

if someone comes along to take a photograph fly away to a convenient place.
why are you perplexed?
oh, you are not a bird?
sorry! the juice shop is that way!

7 comments:

goma said...

திவா நீங்களுமா

goma said...

சுகர் எப்போ எப்படி சேர்க்கணும்னு சொல்லலியே....

goma said...

அந்த குருவி என்ன செய்யுது ...உங்க ஐடியா படி டிவி பாக்குதா

திவாண்ணா said...

//திவா நீங்களுமா //
நானும் என்ன?????
ஒண்ணும் புரியலையே!
//சுகர் எப்போ எப்படி சேர்க்கணும்னு சொல்லலியே....//
அந்த குருவிக்கு சக்கரை வியாதியாம். சக்கரை சேத்துக்காமலேதான் குடிக்குமாம்.!
// அந்த குருவி என்ன செய்யுது ...உங்க ஐடியா படி டிவி பாக்குதா//
என் ஐடியாபடி இல்லை. அதோட ஐடியா படி.... சமையல் ப்ரோகிராம் ஏதாவது பாக்குதோ என்னவோ!

திவாண்ணா said...

அதாகப்பட்டது.... பழத்தில் குருவி ஓட்டை போடறதை படம் எடுக்கப்போனா பறந்து போயிடுத்து. எங்கேன்னு துரத்தினா நாலு வீடு தள்ளி டிவி ஆன்டெனா மேலே ஜாலியா உக்காந்து இருக்கார். என் கேமராவிலே முடிஞ்ச வரை zoom பண்ணேன்.

Kavi said...

நல்லவேளை குருவிக்குன்னு சொன்னீங்க. நான் இங்கின எங்காச்சும் மரம் இருக்கா என்று தேடிப்பார்க்க யோசிச்சேன்.. :)

திவாண்ணா said...

அதுவும் நல்ல ஐடியாதானே? ப்ரெஷா ஜூஸ் கிடைக்குமே! ஒரு ஸ்ட்ராவை எடுத்துக்கிட்டு மரம் ஏறலாம்.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers