Thursday, May 13, 2010

திருடன் திருடன்....

எங்க வீட்டுப்பக்கம் சமீப காலமா திருடர் "நடமாட்டம்" அதிகமா இருக்குதுங்கோ!
வந்து போன சுவடு இருக்குது.


From parrot


சத்தமும் அப்பப்ப கேக்குது. என்னான்னு பாக்கபோனா ஒத்தரும் காணோமுங்க! பலே திருடரா இருக்கார்!


From parrot

சரின்னு இன்னிக்கு எப்படியாவது பிடிச்சுறதுன்னு தயாரா போனேனுங்க! சத்தம் கேட்டுச்சா!
நீட்டி பட படன்னு சுட்டேன். ஆசாமி அசரலை. முக்கை மட்டும் நீட்டி அமுக்கு அமுக்குன்னு அமுக்கறார். வெளிச்சமோ நமக்கு எதிரா சதி செய்யுது! சரியா புடிக்க முடியலீங்கோ!
பாருங்கோ இன்னாமா திருட்டு முளி முளிக்கறாரு!


From parrot





இந்த முளிய மட்டும் வெச்சுகிட்டு எப்படி புடிக்கறதுன்னு கேக்கிறாங்கோ! இன்னோரு படம் பாத்தா வசதியா மூஞ்சிய மறைச்சுகினாரு!



From parrot


சரின்னு காமிராவ துக்கிகிட்டு திரும்பிட்டேனுங்கோ. அப்புறமா பிக்காஸாலே வேலை செஞ்சு பாத்து ஆளை கண்டுபுடிச்சோமுங்க!


From parrot1

இவர இன்னாங்கோ பண்ணுரது?

12 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த நிறைவு:))!

//இவர இன்னாங்கோ பண்ணுரது?//

திருடனை தினம் தினம் ரசியுங்க.

goma said...

பேசாம ,கிளி ஜோஸ்யக்காரரைக் ,கூப்பிட்டுக் கேட்டிருந்தால் ,உங்க தோட்டத்திலே, பழம் சுட்ட கிளியே ,கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்து திருட்டு முழியோட சீட்டு எடுத்துத் தந்திருக்குமே.

திவாண்ணா said...

நன்னி ரா.ல அக்கா!
@கோமா அக்கா எனக்கு ஜோசியத்துல நம்பிக்கை குறைவுங்கோ! :-)))))

KABEER ANBAN said...

சரியான பச்சைத் திருடந்தான்...பக்குன்னு புடிச்சிட்டீங்களே,பிரமாதம் :))

உமா said...

அட இந்த திருட்டுப் பய உங்க வீட்டுக்கு வர நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கீங்க. எங்கங்க இருக்கு உங்க வீடு. நல்ல பசுமையான மரம், அதுல செழுமையான பழம், அதை இரசித்து உண்ணும் அழகான கிளி, இதையெல்லாம் இரசித்த உங்கள் அழகான மனசு, இப்படி எல்லாம் ஒன்னாச் சேருவது ரொம்ப கஷ்டங்க. திருடர் எங்கேயோ இருந்துகிட்டுஎங்க மனசையெல்லாம் கூட திருடிட்டாருங்க.

அவர் தினம் தினம் வருவதற்காக உங்க வீட்ட இப்போது பசுமையாவே வைத்திருங்கள். எப்போடும் உங்கள் மரத்துல பழங்கள் கனிந்து குலுங்கட்டும்.
எங்க வீட்டுப் பக்கமெல்லாம் எங்கு பார்த்தாலும் கற்சுவர்தான்.இருக்கும் ஓரிரு மரங்களும் நாடும் பறவைகளில்லாமல் தனித்திருக்கின்றன.
மிக அருமையான் படங்கள். வாழ்த்துக்கள்.

உமா said...

இந்த படத்தைப் பிடிக்க நீங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கும், தங்கள் திறமைக்கும் மிகுந்த பாராட்டுகள்.

திவாண்ணா said...

@ கபீரன்பன் :-))

திவாண்ணா said...

வாங்க உமா மேடம்! உங்க இனிய வார்த்தைகளுக்கு நன்றீ. பகவான் கருணையில கடலூரில இன்னும் பசுமையாவே இருக்கு எல்லாம். தினசரி கிளிகள் நாஸ்தாவும் மாலை ஸ்நாக்ஸ் உம் இங்கதான். அதுக கத்தறப்ப அவ்வளோ சந்தோஷமா இருக்கு. ஆனா பாருங்க அதுகளுக்கு ரொம்பவே வெக்கம். மூஞ்சிய காட்ட தயக்கம். நானும் கேஸ் எல்லாம் போட மாட்டேன்னு சொல்லிப்பாத்தேன்! நடக்கலை.பொறுமை இழந்துபோய்தான் கிடைக்கறது கிடைக்கட்டும்ன்னு சுட்டேன்.
போட்டோ க்வாலிட்டி பாத்தா 'பிட்' மக்களேல்லாம் ரெண்டாம் தரம் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க! நீங்க எல்லாருமே ரசிக்கிறீங்க! ரொம்பவே சந்தோஷம்!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், எங்க வீட்டு மாமரத்திலேயும் லூட்டிதான். கிளி என்னமோ கண்ணிலேயே பட மாட்டேங்கறது! அணில்தான் எல்லா மாம்பழத்தையும் தின்னுட்டுக் கொழுகொழுனு ஒண்ணை ஒண்ணு விரட்டிண்டு திரியறது. கிளிச்சத்தம் கேட்கறது, அதோட சரி, பார்க்கமுடியலை, எங்கேயோ போய் மறைஞ்சுக்கறதே! :(((((

திவாண்ணா said...

சத்தம் கேட்டா அது இருக்கவே இருக்கும். மறைஞ்சுக்கிறதுல ரொம்ப திறமைசாலி. அதனால்தான் ப்ளாக் எழுதினேன்.

geethasmbsvm6 said...

எப்படியோ படம் எடுத்திருக்கீங்க! பார்க்கிறேன், நானும்!

ராமலக்ஷ்மி said...

@ கீதா மேடம்,

//எப்படியோ படம் எடுத்திருக்கீங்க! பார்க்கிறேன், நானும்! //

கீச்சிட்டு காட்சி தர மறக்கும் உங்க வீட்டுக்கிளி, பேசும் பொற்சித்திரமாவதைப் பார்க்கக் காத்திருக்கிறோம் நாங்க:)!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers