Tuesday, June 8, 2010

செம்போத்து



சில மாதங்கள் முன்னே ஒரு மருத்துவ மனைக்கு போன போது ஒரு பறவையை பார்க்க நேர்ந்தது. அது காக்கா மாதிரி இருந்தது. ஆனால் நான் பார்க்கிறேன்னு தெரிஞ்சு வேகமா ஓடிப்போச்சு; பறக்கலை. இது கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. அதைப்பத்தி விசாரிச்சா அங்கே யாருக்கும் தெரியலை.

From bird

நேத்து எங்க வீட்டு வாசல் பக்கமே இத பார்த்தேன். ஓடிப்போய் காமிராவை துக்க்கிகிட்டு வந்தேன். நமக்கும் பறவைகளுக்கும்தான் என்ன ராசின்னு உங்களுக்கு தெரியுமே! ஒரு படம் எடுக்க வந்தா பறந்து போயிடும். இல்லை ஓடி ஒளிஞ்சுக்கும்! இது ஓடும்ன்னு ஊகம் பண்ணி வாசல் பக்கம் போகாம, வீட்டு பக்கவாட்டை பார்க்கிற மாதிரி போர்டிக்கோ மேலே இறங்கினேன். நினைச்சா மாதிரி அது வீட்டின் பக்கவாட்டிலேதான் நடமாடினது. முதல்லே ஒரு செடி கீழே ஒளீஞ்சுகொண்டு இருந்தது. விடாப்பிடியா பொறுமையா இருந்ததிலே கொஞ்சம் தரிசனம் கிடைச்சது.



From bird

அதுவும் என்ன? ஒண்ணுதான் உருப்படி. மீதி ரெண்டு படங்களிலே வால் தெரியலை. 'வா' மட்டுமே தெரிஞ்சது. ஜூம் பண்ணி எடுக்க நேரமில்லை.

From bird

அது சரி! இது என்ன பறவை? தெரிஞ்சுக்க வலை நண்பர்களைத் தவிர வேற நல்ல உபாயம் உண்டா என்ன?

buzzலே படத்தை போட்டு என்னன்னு கேட்ட ஒரு மணி நேரத்திலேயே விடை கிடைச்சுடுத்து. இதுக்கு செம்போத்துன்னு பேராம். செண்பக பறவைன்னும் சொல்லுவாங்களாம். எல்லா நம்ம கீதா அக்கா சொன்னது. உறுதி படுத்திக்க வலையிலே செம்போத்து ன்னு தேடினா... சரிதான். இன்னும் நல்ல படம் ஒண்ணு பார்க்க முடிஞ்சது. சரிதான்ன்னு உறுதியாச்சு.
அதை எங்கே பாத்தேன்னு கேட்கிறீங்களா? அது இதை விட நல்ல படம் என்கிறதால சொல்ல மாட்டேனே! வேணூம்ன்னா நீங்களே தேடிப்பாருங்க!ஹிஹிஹிஹி!

11 comments:

goma said...

அது ஒண்ணும் இல்லை திவா...


தலைக்கு அடிக்க யாரோ கரைச்சு வச்சிருந்த ஹென்னா கோப்பையில் இறக்கையை விட்டு கலக்கியிருக்கும்

திவாண்ணா said...

ஓஹோ! அப்புறம் கண் சிவப்பா இருகேன்னா அது கஞ்சங்டிவைடிஸ், ஏன் தத்தி தத்தி போகுது, பறக்கைலைன்னா நம்மில சிலர் ஊனமா இருக்காங்களே அந்த மாதிரி அதுக்கு பறக்க தெரியலைங்க வேண்டியது. இன்னும் என்ன வெச்சு இருக்கீங்க? :-)))

geethasmbsvm6 said...

தலைக்கு அடிக்க யாரோ கரைச்சு வச்சிருந்த ஹென்னா கோப்பையில் இறக்கையை விட்டு கலக்கியிருக்கும்//

ஹென்னா அடிக்காமலேயே என் தலை ஒரு காலத்தில் (பதினைந்து வயசு வரை) அப்படித் தான் இருந்தது. செம்பட்டைனு சிலர் கூப்பிட்டாலும் அம்மா செம்போத்துனு சொல்லுவா. ஆனால் அதுக்கப்புறம் பல வருஷங்கள் கழிச்சுத் தான் நான் செம்போத்தை ராஜஸ்தானில் எழுபதுகளில் பார்த்தேன். அப்போதில் இருந்து இது நல்ல தோழன்/தோழி, என்ன கொஞ்சம் கண்டு பிடிக்கிறது கஷ்டம், ஒளிஞ்சு விளையாடும். கண்டு பிடிச்சுட்டாலும் விலகிடாது. மூக்கு உடைஞ்ச ஒரு மரங்கொத்திக் கூட இது விளையாடும். பார்க்கவே அற்புதம். அப்போல்லாம் படம் பிடிச்சு வைக்கணும்னு தோணலை. இங்கே அம்பத்தூரிலே செம்போத்து கண்ணிலேயே படலை. :(((((((

ராமலக்ஷ்மி said...

இப்போதான் பார்க்கிறேன் இந்தப் பறவையை. நல்ல பகிர்வு.

திவாண்ணா said...

ஹென்னா அடிக்காமலேயே என் தலை ஒரு காலத்தில் (பதினைந்து வயசு வரை) அப்படித் தான் இருந்தது. ??

ஹேன்?
//கண்டு பிடிச்சுட்டாலும் விலகிடாது. //
அட! ஓடிப்போகாதா? பிரென்டு பிடிச்ச பார்க்கலாம் போல இருக்கே!

திவாண்ணா said...

ரா.ல....தாங்கீஸ்!

goma said...

நானும் தேடிப் பிடித்தேன்.நீங்கள் சொன்ன நல்ல படம் பார்த்தேன்.குண்டு குண்டா அழகான செம்போத்து மருதமலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தது.

அந்த மருதமலை மாமணி முருகன்தான் உங்களுக்கு ஆசி அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

geethasmbsvm6 said...

கோமா சொன்னாங்களேனு வலையிலே தேடினால் எனக்கு முதல்லே வந்த படங்கள் எல்லாம் கத்ரீனா கைஃப், வித்யா பாலன், கரீனா கபூர்னு தான்! நொந்து போய் அப்புறமா வெப் க்ளிக் செய்து பார்த்ததில் போஸ்டும் கிடைச்சது, படங்களும் கிடைத்தன. நன்றி. :))))))))))))))

திவாண்ணா said...

@ கோ அக்கா: அந்த படம் ரொமப்வே அழகு!

2 கீ அக்கா: என்னக்கா இது எனக்கு தமிழ்லே செம்போத்துன்னு அடிச்சு எடுத்த உடனேயே பறவை லிங்க் வந்துடுத்தே?

Rajewh said...

திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத்
திருத்தாய் செம்போத்தே. 10.10.௧

திருமங்கை ஆழ்வார் பாடின பாசுரத்தில் செம்பொத்து பறவையை எப்படி இருக்கும் என்று தெரியாமல் இருந்தது.


எதேச்சையாக பார்த்தேன்.
தரிசனம் கண்டேன் . மிக்க நன்றி ஐயா!

geeyes said...

திவா சார், இந்த பக்கத்தை இப்போதுதான் பார்க்க ஆரம்பித்துள்ளேன். பார்த்தவரை சிறப்பாக உள்ளது.
-ஜி.ஸன்தானம்

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers