Saturday, February 19, 2011

காத்தாடி


மாசி மகத்துக்கு கடற்கரைக்கு போன பேத்திக்கு இதை வாங்கி வந்தார்கள். சாதாரண காத்தாடிதான்! சின்ன வயசில் பார்த்தது. வெகு நாட்களாக கண்ணில் படவில்லை. அதனால் ஒரே காத்தாடியில் இரண்டை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம். (ரொம்ப வருஷமாவே இது இருக்குன்னு சிலர் சொல்லரது காதில விழுது!) ஏன் இரண்டு? முன்னால் இருப்பது கடிகார முள் திசை அமைப்பில் எதிராகவும் பின்னால் இருப்பது கடிகார முள் திசையிலும் சுற்றுகின்றன.

ஏன் எதிர் திசைகள்? உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்! உங்க வீட்டு குழந்தைகளை கண்டு பிடிக்கச்சொல்லுங்க!

From 18

From 18


13 comments:

goma said...

காத்தாடியின் இரண்டு வீல்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் ரிப்பன்கள் ஒரு வீலில் இடது பக்கமாகவும் அடுத்ததில் வலப் பக்கமாகவும் சாய்த்து ,எதிர் எதிர் திசைகளில் ஒட்டப் பட்டிருக்கிறது.ஒன்று சுற்றும் பொழுது அந்த காற்றலை விசையில் அடுத்தது சுழல்கிறது

சரிதானே திவா...

ஆத்தாடி !!!காத்தாடியைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே...

goma said...

காத்தாடியின் இரண்டு வீல்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் ரிப்பன்கள் ஒரு வீலில் இடது பக்கமாகவும் அடுத்ததில் வலப் பக்கமாகவும் சாய்த்து ,எதிர் எதிர் திசைகளில் ஒட்டப் பட்டிருக்கிறது.ஒன்று சுற்றும் பொழுது அந்த காற்றலை விசையில் அடுத்தது சுழல்கிறது

சரிதானே திவா...

ஆத்தாடி !!!காத்தாடியைப் பத்தியெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே...

திவாண்ணா said...

கரெக்ட்!
உண்மைய சொல்லுங்க! எந்த குழந்தைகிட்டே மாத்தாடி கண்டு புடிச்சீங்க?

goma said...

கோமாவுக்கு இதெல்லாம் ஜு..ஜ்ஜுபி

ராமலக்ஷ்மி said...

//(ரொம்ப வருஷமாவே இது இருக்குன்னு..//

ஆமா:)!

geethasmbsvm6 said...

ரொம்ப வருஷமா இருக்குன்னாலும் இது பள்ளியிலே பாடத்துக்காக வைச்சிருந்தாங்க. வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ப்ராஜெக்டுக்காக வீட்டிலே சுய முயற்சியிலே செய்ததும், குழந்தைகளுக்காகச் செய்து கொடுத்ததும், நினைவில் வருது.

அதிகம் படிக்காத என் மாமியார் நல்லாச் செய்து கொடுப்பாங்க! பல நினைவலைகள் கிளம்புகின்றன. பதியலாம்! இங்கே வேண்டாம். :)))))

திவாண்ணா said...

pathiyungka pathiyungka waiting!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super காத்தாடி... hmm... பல நினைவலைகள்...:)

திவாண்ணா said...

அட! ஏடிஎம் இங்கே! நல்வரவு!
//Super காத்தாடி... hmm... பல நினைவலைகள்...:)//
அலைகளை பகிர்ந்துகொள்க!

geethasmbsvm6 said...

உங்க காத்தாடிக்கு நாங்க இணைப்புக் கொடுத்தோமாக்கும்,:P :P :P அதான் ஏடிஎம் வந்திருக்காங்க, இல்லையா ஏடிஎம்? இணைப்பு இங்கே

திவாண்ணா said...

ஓ அதுவும் அப்படியா?
இனிமே எல்லா பதிவுகளுக்கு இணைப்பு கொடுங்க!
:-)))))

vijayaragavan said...

Conservation of Energy - kind of an mutual inductance.

Pranavam Ravikumar said...

Hei... Nice One!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers