இது கொஞ்சம் விசேஷமான பதிவு.
ஓலை சுவடிகளை மின்னாக்கம் செய்ய இது வழிமுறை.
தேவையானவை:
1. ஓலைச்சுவடிகள்.
2. காமிரா. ஜூம், மெமரி கார்ட் உடன்.
3. குதிரை ஸ்டூல்.
4. உதவியாளர்கள்
5. நல்ல இயற்கையாக வெளிச்சமான இடம்.
6. சுவடிகளை கீழே வைக்க ஒரு வெள்ளை சார்ட் தாள்.
7. நிட்டிங் நீடில்
ரெடியாயிட்டீங்களா?
கீழே வெள்ளை சார்ட் தளை வையுங்க.
குதிரை ஸ்டூலை அது பக்கத்திலே வையுங்க.
ஓலை சுவடியை ஜாக்கிரதையாக பிரிக்கவும்.மேலிருந்து கீழே வரிசையாக ஒவ்வொன்றாக எட்டு சுவடிகளை வைக்கவும். காமிராவில் செட்டிங் அமைக்கவும். எவ்வளவு தெளிதிறன் முடியுமோ அதை பொறுத்து அதிக தெளிதிறன் அமைக்கவும். படத்தின் அளவையும் அதிகமாக அமைக்கவும். என் கானன் எஸெக்ஸ் 100 இல் சூப்பர் ஃபைன், ஃபைன், நார்மல் என இருக்கிறது.அதில் ஃபைன் போதுமானது. படத்தின் அளவு லார்ஜ் என அமைத்தேன். அவரவர் காமிராவை பொருத்து இது மாறும் என்பதால் சோதனை செய்து சரியான அளவை காண்க.
குதிரை ஸ்டூல் மீது கைகளை தாங்கிக்கொண்டு காமிராவை கீழ் நோக்கி பார்த்து ஜூம் செய்து சுடவும். சந்தேகமானால் இரண்டாம் முறை சுடலாம். பின்னால் இரண்டில் எது நன்றாக இருக்குன்னு பார்த்துக்கொண்டு வேண்டாததை நீக்கிவிடலாம்.
ஒரு போட்டோவில் எட்டு சுவடிகளின் ஒரு பக்கம் பதிவாகும்.
அடுத்து எல்லா ஓலைகளையும் பக்கம் திருப்பி இன்னொரு (அல்லது 2) படம் எடுக்கவும்.
படம் எடுத்த பின் ஓலைகளை வரிசை மாறாமல் அப்படியே முதல் சுவடி உள்ளே போகும் படி நிட்டிங் நீடில் இல் சொருகவும். அடுத்த எட்டு சுவடிகளை எடுத்து வரிசையாக அடுக்கவும். பின் முன்னே சொன்னபடி....
எல்லா சுவடிகளையும் படம் எடுத்தபின் ஓலைச்சுவடிகளை பழையபடி கட்டி வைக்க வேண்டும். நிட்டிங் நீடில் இல் அவை வரிசையாக இருக்கும். கயிறை நுழைத்து கவனமாக கட்டுங்கள்.
பெரியதாக மலைக்க வைக்கும் அளவு சுவடிகளைக்கூட எளிதில் விரைவில் படம் எடுத்துவிடலாம்.
படம் எடுத்தபின் போஸ்ட் ப்ராஸஸிங்.... அடுத்த பதிவில்...
விளக்கப்படங்கள் கீழே காண்க.
From minnaakkam |
From minnaakkam |
3 comments:
நமஸ்தே திவாஜி.
தங்களின் சேவைக்கு பாராட்டுக்கள். செய்திக்கு நன்றி.
Very interesting and useful.
அஷ்வின், ராஜராஜேஸ்வரி நன்றி!
Post a Comment