கடும் கோடையாச்சேன்னு மொட்டை மாடில பறவைகளுக்காக தண்ணீர் ஏற்பட்டு செய்தேன். பெரிசா ஒண்ணுமில்ல. நீர்த்தொட்டி நிரம்பி வழியறப்ப தண்ணி சேருகிறா மாதிரி ஒரு டிரம் வெச்சேன். காகங்கள் மற்ற பறவைகள் எல்லாம் தண்ணி குடித்து போறதை பாத்து சந்தோஷம்.
From crow |
காக்கா இதுக்கு கைமாறா துணி உலர்த்துகிற இடத்து பக்கத்தில பைப் மேலே உட்கார்ந்து வேட்டி, புடவை, கைப்பிடி சுவர் எல்லாத்து மேலேயும் எச்சமிட்டு அசிங்கப்படுத்தி கொண்டிருந்தது.
என்ன செய்யறதுன்னு புரியலை. போன ரெண்டு மாசமா இந்த பிரச்சினை ரொம்ப அதிகமாயிடுத்து.
From crow |
சில சமயம் நேரடியா எச்சமிடாம போனாலும் துணி காத்துல நகர்ந்து போய் கைப்பிடி சுவத்தில இருக்கிற எச்சத்து மேலே பட்டு துணி வீணாகும்.
From crow |
திடீர்ன்னு பல வருஷங்கள் முன்னால ஆர்தர் ஹெய்லியோட ஹைய் ப்லேசெஸ்
புத்தகம் படிச்ச நினைவு வந்தது. அதில ஒரு ஆசாமி அலுவலக கூரை மேலே புறாக்கள்
எச்சமிடுவதை தடுக்க என்ன செஞ்ச்சார்ந்னு படிச்சது நினைவுக்கு வந்தது.
ரெண்டு மூணு பேர்கிட்ட சொல்லி சொல்லி நேத்து கடைசி அல்டிமேட்டம்ன்னு சொல்லி
ஒரு வழியா கம்பி வாங்கி வந்து கட்டிட்டாங்க.
From crow |
மேலே இருக்கிற படத்துல கீழ் கம்பி தெரியலை. கீழ் படத்தை பாருங்க. பைப்புக்கு இணையா கம்பி கட்டியாச்சு. இப்ப காக்கா அங்கே உக்கார முடியாது. பிரச்சினை தீருமா இல்லை காக்கா வேற வழி கண்டுபிடிக்குமான்னு பொறுத்துதான் பார்க்கணும். நாராயணா காப்பாத்து!
From crow |
4 comments:
பால்கனியில் புறாக்களுக்கு உணவளித்தலிலும் இதே பிரச்சனை. காக்கா கருணை வைக்கட்டும்:)!
try the same technique!
அதெல்லாம் காக்கா வந்துடும். வராமப் பின்னே எங்கே போகும்??
Ina bird feed vaiththaalum, ivar solkira maathiri toilettum kattivaikkanum:)
good idea Thambivaasudhevan.
But crows are very clever.:)
Post a Comment