Thursday, May 10, 2012

சித்திரா பிரதமை....பிகாஸா....

ஹிஹிஹி!
போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சு!
மன்னிக்கணும்!

இது பிகாஸாவில ஒரு படத்தை நல்லா ஆக்கின வழி பத்தி பதிவு.
சித்திரா பௌர்ணமியகோட்டை விட்டுட்டேன். அதனால் அடுத்த நாள் போய் காத்திருந்து எடுத்தேன். காமிராவில மேக்சிமம் ஜூம் பண்ணியாச்சு. 40 மடங்கு (டிஜிட்டலும் சேத்து) படத்தை பாத்தா 'வே' ன்னு இருந்தது. சந்திரன் நல்லா வந்தாலும் அதை சுத்தி கருப்பா இல்லே இருக்கணும்? இதில் ஒரே புள்ளி புள்ளியா அசிங்கமா இருந்தது. (சுருக்கி வலை ஏத்தினதுல இங்கே கொஞ்சம் சரியா இருக்கிறா மாதிரி ஒரு மாயை...)



சரின்னு பிக்காசாவிலே கொஞ்சம் திருத்திப்பார்க்க, அட எவ்வளோ நல்லா ஆயிடுத்து!


என்ன செய்தேன்?
லைட்டிங் கலர் பிக்ஸ் க்கு போய் ஷேடோஸ் என்பதில கொஞ்சம்- கொஞ்சமே கொஞ்சம்- அதிகமாக்கினேன்.

பிகாஸா 3 ல நிறையவே வசதிகள் இருக்கு. ஒரு தரம் பாருங்க....
டாடா!

No comments:

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers