வருணபகவான்
கூகுள் ப்ஸ்ஸையோ என் ப்ளாக்கையோ
படிக்கறார் போலிருக்கு!
முந்தா
நேத்து ப்ளஸ்ல மழை பத்தி
எழுதினது அவருக்கு தெரிஞ்சுடுத்து.
அப்படியா சொன்னே?
பாத்துக்கன்னு
கருவி இருக்கணும்.
போஸ்ட் போட்ட
கொஞ்ச நேரத்திலேயே ஜன்னல்
கதவை சாத்த வேண்டியதா போச்சு!
தூறல் அதிகம்.
அப்புறம் தூறல்
மழையாவே ஆகி கிட்டத்தட்ட
அரைமணி பெஞ்சது.
மானம் உறுமோ
உறுமுன்னு உறுமிகிட்டு
இருந்தது!
கொஞ்சம் மின்னலும்.
நேத்தி ஐஎம்டி
சைட்ல பாத்தா 16
மிமீ ன்னு
போட்டிருக்கு.
அதை நான்
கண்டுக்கலையாம்!
அதுக்காக நேத்து
ராத்திரி ஒன்பது மணி அளவில
சுமார் ஒரு மணி நேரம் பலத்த
மழையாவே பொழிஞ்சு தள்ளிட்டார்!
எப்படியும் 20
மிமீ க்கு மேல
இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
மிஸ்டர்
வருண பகவான்!
தாங்க்ஸ் சொல்லற
அதே நேரம் நக்கீரன் பரம்பரை
மாதிரி குற்றம் குற்றமேன்னு
சொல்லி வெக்கறேன்.
இந்த சீசனுக்கு
இடி மின்னலோட குறைந்த நேரத்துல
அதிக மழைதான் இருக்கணும்.
இப்படி அப்பசி
மாசம் மாதிரி நின்னு பெய்யறதில்லே!
சரி இன்னைய
படம் வீடு கட்டறப்ப பார்க்க
வேண்டிய ஒரு சமாசாரத்துக்காக.
சுமார் 30
வருஷம் முன்னே
வீடு கட்டினப்ப மேஸ்த்ரி
டிசைன்தான்.
அவர் வீட்டு முன்
பக்கம் 'வெளிவேஷன்'
நல்லா இருக்கணும்ன்னு
இப்படி பொட்டி மாதிரி
கட்டிப்புட்டார்.
ட்ரெய்ன்னுக்கு ஒரு இஞ்ச் பைப். அப்பவே போதுமான்னு கேட்டேன். நிச்சயமா போதும் சார்ன்னார். போதும்தான்... அதுல எதுவும் புகுந்து அடைக்காத வரை. என்ன ஆகும்ன்னா இலை சத்தை புழுதி எதாவது விழுந்து அது அடைபடும். நீச்சல் பழக விருப்பம் இல்லைன்னா, ஞாபகமா மழை பெஞ்ச அடுத்த நாள் இதை குத்தி க்ளியர் பண்ணனும்!
5 comments:
அடடா... மழை வரும் போதெல்லாம் ஒரு வேலை இருக்கே...!
அடி சக்கை உங்கள் காட்டில் இல்லை இல்லை உங்கள் balcony யில் மழையா! good ! good
அடி சக்கை உங்கள் காட்டில் இல்லை இல்லை உங்கள் balcony யில் மழையா! good ! good
ஜூன் மாசத்திலே இருந்து ஆரம்பிக்கும் இந்த இலை, தழைகளை நீக்கும் வேலை. தொடர்ந்து மார்ச் வரை சரியா இருக்கும். :)))) மழை கொட்டட்டும்.
டிடி, எழுதறச்சே பக்கத்திலேயே நிப்பீங்களா? :))))
Post a Comment