Thursday, June 27, 2013

கோடை மழை!


கோடை மழை!
எங்கூருக்கு முக்கியமான மழை ஐப்பசி கார்த்திகைதான். நின்னு நிதானமா அஞ்சாறு நாள் பெய்யும். குறைஞ்சது நச நச தூறலாவது இருக்கும். கோடை மழை வேற மாதிரி.
வழக்கமா பகல்ல நல்ல வெயில் இருக்கும். சாயந்திரம் தென் மேற்கில மேகங்கள் கூடும். ஆனா அனேகமா மழை வராது. பண்ணுருட்டில வெளுத்து வாங்கும். மேக்சிமம் எங்கூருக்கு 5 கி.மீ மேற்கே பெய்யும். ஆனா கடலோரம் இருக்கிற எங்கூருல அனேகமா மழை பெய்யாது. இந்த பெய்யாது என்கிற பாசிபிலிடி வருஷா வருஷம் அதிகமாகிகிட்டே போகுது.
வாரம் ஒரு நாள் மழை பெஞ்சுடும். வழக்கமா ஒரு 10 -15 நிமிஷம்தான். ஆனா அதுகுள்ள அடி பிச்சிடும். இடி மின்னல் காத்து இல்லாம மழை கிடையாது! மழை வரும் 2 நிமிஷம் முன்னே கெமிகல் பாக்டரிகளின் வாசனை வந்துடும். ஓடிப்போய் ஜன்னல் கதவெல்லாம் சாத்திட்டா பிழைச்சது. இல்லைன்னா மாடி ஹால்ல எல்லாம் தண்ணி வந்துடும். அப்படி வீசி அடிக்கும்! பத்து நிமிஷத்துல வந்த சுவடு தெரியாம காணாமப்போயிடும்!

இந்த வருஷம் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. நாள் முழுதும் மேகக்கூட்டமா இருக்கு. அதனாலேயே மதிய சூடு அதிகமா இருக்கு. சாயந்திரம் கருத்த மேகம் கொஞ்சம் வருது. அனேகமா தூறுது. லேசான தூறல் மிதமான தூறல் ரெண்டே வகைதான். இப்பக்கூட கொஞ்சம் பலமான தூறல். ஜன்னல் கதவை மூடாமலே டைப்பிகிட்டு இருக்கேன். காத்தாவது? மூச்! மின்னல் மழை மோகினி ஒண்ணுத்தையும் காணோம்! ஹும்!



6 comments:

geethasmbsvm6 said...

அழகான மழை! இங்கே ரங்கநாதருக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்னு மழை வந்துட்டு உடனே போயிடும்.

geethasmbsvm6 said...

தென்மேற்குத் திசையிலே மேகங்கள் இருந்தாலே மழை வராது. பெருந்தூற்றலோடு நின்னுடும். ஈசானிய மூலையிலே ஒரு பொட்டுத் தெரிஞ்சாலும் போதும். கொட்டித் தீர்க்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் அப்படித்தான்...!

திவாண்ணா said...

டிடி, நன்றி!
இந்த கீ அக்கா என்னவோ தப்பா சொல்லறாங்க பாருங்க!
கீ அக்கா இந்த சீசனுக்கா ஈசான்ய மூலை பத்தி பேசறீங்க?

geethasmbsvm6 said...

இந்த சீசனுக்குனு ஒண்ணும் சொல்லலை! :P :P :P :P பொதுவாய்ச் சொன்னேன். :)))))

திவாண்ணா said...

இந்த கோடை சீசன் மழை தென் மேற்கேந்துதான். ஐப்பசி கார்த்திகைதான் நீங்க சொல்கிறா மாதிரி ஈசான்யத்துலேந்து!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers