Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Thursday, November 7, 2013

புல்புல் கூடு, முட்டைகள்.

வீட்டில முதல் மாடிக்கு போற வழில இந்த மான் கொம்பு இருக்கு. இந்த புல்புல் எப்பவுமே இதுலதான் கூடு கட்டற வழக்கம். திருப்பி கட்டி முட்டைகளும் இட்டாச்சு. சும்மா இருக்க வேண்டியதுதானே? யார் எப்ப இந்த வாசலை கடந்து போனாலும் உடனே பறந்துப்போய் ஜன்னல்ல உக்காந்துகிட்டு லபோ திபோன்னு கூச்சல்! தாங்கலை!


[Image]

[Image]

updated 12-11-2013

Friday, March 29, 2013

கூடு கட்டினவர் ...

கூடு கட்டினவர் இவரா? இவரோட துணையா?

 
 
 
 
 
 
 
Posted by Picasa

Monday, September 19, 2011

புதிய பறவை எனது நெஞ்சில்.....


எங்க வீட்டு தோட்டத்து தென்னை மரத்துக்கு இன்றைய புதிய வரவு.. சமத்தா அஞ்சு நிமிஷம் போஸ் கொடுத்தார்.



From new visitor









பின்புலத்திலே இவ்வளோ வெளிச்சத்தோட பறவையை போகஸ் பண்ணி படம் எடுக்க முன்னே ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம் ஜீவ்ஸ் சொல்லிக்கொடுத்த உத்தியை பயன்படுத்தினேன். கடைசி படங்கள் இன்னும் ஒரு முன்னேற்றம். பறவையை போகஸ் பண்ணாம கீழே இருக்கிற தென்னை மட்டையை போகஸ் பண்ணேன். பறவையும் தானா நல்லா வந்துடுத்து! ஜீவ்ஸுக்கு நன்றி!



Posted by Picasa

Saturday, July 16, 2011

கா கா காக்கா!

கடும் கோடையாச்சேன்னு மொட்டை மாடில பறவைகளுக்காக தண்ணீர் ஏற்பட்டு செய்தேன். பெரிசா ஒண்ணுமில்ல. நீர்த்தொட்டி நிரம்பி வழியறப்ப தண்ணி சேருகிறா மாதிரி ஒரு டிரம் வெச்சேன். காகங்கள் மற்ற பறவைகள் எல்லாம் தண்ணி குடித்து போறதை பாத்து சந்தோஷம்.

From crow

காக்கா இதுக்கு கைமாறா துணி உலர்த்துகிற இடத்து பக்கத்தில பைப் மேலே உட்கார்ந்து  வேட்டி, புடவை, கைப்பிடி சுவர் எல்லாத்து மேலேயும் எச்சமிட்டு அசிங்கப்படுத்தி கொண்டிருந்தது.
என்ன செய்யறதுன்னு புரியலை. போன ரெண்டு மாசமா இந்த பிரச்சினை ரொம்ப அதிகமாயிடுத்து.

From crow

சில  சமயம் நேரடியா  எச்சமிடாம போனாலும் துணி காத்துல நகர்ந்து போய் கைப்பிடி சுவத்தில இருக்கிற எச்சத்து மேலே பட்டு துணி வீணாகும்.

From crow


திடீர்ன்னு பல வருஷங்கள் முன்னால ஆர்தர் ஹெய்லியோட ஹைய் ப்லேசெஸ் புத்தகம் படிச்ச நினைவு வந்தது. அதில ஒரு ஆசாமி அலுவலக கூரை மேலே புறாக்கள் எச்சமிடுவதை தடுக்க என்ன செஞ்ச்சார்ந்னு படிச்சது நினைவுக்கு வந்தது. ரெண்டு மூணு பேர்கிட்ட சொல்லி சொல்லி நேத்து கடைசி அல்டிமேட்டம்ன்னு சொல்லி ஒரு வழியா கம்பி வாங்கி வந்து கட்டிட்டாங்க.

From crow
மேலே இருக்கிற படத்துல கீழ் கம்பி தெரியலை. கீழ் படத்தை பாருங்க. பைப்புக்கு இணையா கம்பி கட்டியாச்சு. இப்ப காக்கா அங்கே உக்கார முடியாது. பிரச்சினை தீருமா இல்லை காக்கா வேற வழி கண்டுபிடிக்குமான்னு பொறுத்துதான் பார்க்கணும். நாராயணா காப்பாத்து!


From crow

Thursday, April 7, 2011

மை நா!

நாலு நாள் முந்தி குளிச்சுகிட்டு இருக்கறப்ப வெளியே தோட்டத்து பக்கம் ஒறே பறவை கூச்சல். என்னடா ஏதாவது பூனை கீனை எதையாவது பிடிச்சுடுத்தான்னு யோசனை. எப்படியும் குளியல் முடிஞ்சு போய் பாக்கிறத்துக்குள்ளே 4-5 தவிர எல்லாம் கொய்யட். சரி ஏதாவது தேறுமா பாக்கலாம்ன்னு கமைரா சகிதமா மாடி அறையிலேந்து எட்டிப்பாத்தேன்! எல்லாம் எங்கெங்கோ ஒளிஞ்சுண்டு சீண்டுதுங்க!

இங்கே இருக்கா? இல்லை!
From mynah!

இங்கே மாங்கா மட்டும்தான் இருக்கு!
From mynah!


விடாப்பிடியா அங்கேயே நின்னதுல மெதுவா ரெண்டு மட்டும் தலை காட்டிச்சுங்க. சுட்டுட்டேன்!
From mynah!

ஒண்ணு பொண்ணு! வெட்கத்துல ஓடி போச்சு!

From mynah!

கோபமா?
From mynah!

மூக்கை தூக்கிகிட்டு...
From mynah!

பேசமாட்டேன் போங்க!
From mynah!


புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
From mynah!


Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers