Sunday, September 14, 2008

மனோரமா, ச்சீ பனோரமா!

கொஞ்ச நாள் முன்னே பிட் ல பனோரமா படம் எடுக்கிரத பத்தி பதிவு போட்டங்களா, சும்மா இருப்போமா? அட கேனன் காமிரா ல வேண்டிய வசதி இருக்காமே ன்னு என் செல்லக்குட்டியை எடுத்து பாத்தேன். வசதி இருந்தது. சரி நாமளும் பனோரமா படம் எடுக்கலாம் ன்னு நினச்சு நேத்துதான் நேரம் கெடச்சிது.

மாடிக்கு வழக்கம் போல போய் ஒரு உசரமான ஸ்டூல போட்டு அது மேல காமிர வெச்சேன். கையேடை புரட்டி பாத்து ஃபோட்டோ ஸ்டிச் பாங்கில அமச்சுகிட்டேன். அது முன்னிருப்பா இடது -> வலது அமைப்பு வெச்சு இருந்தது. போனா போறது அப்படியே இருக்கட்டும் ன்னு விட்டுட்டேன்.

மாடில இடது பக்கம் சுவர் இருக்கு. அதனால் அது முடிஞ்சு போற இடத்தை கோடில வெச்சு முதல் க்ளிக். அப்புறம் பாத்தா திரைல இன்னும் படம் தெரியறா மாதிரி இருக்கே! அட காமிரா இடது பக்கம் போன படத்தோட வலது கோடி ( அதுக்குள்ள கன்ப்யூஸ் ஆகலையே?! :-)) 1/3 பாகத்த காட்டுது.

இப்ப அடுத்த படம் எடுக்க வசதியா போச்சு. ஏன்னா அடுத்த படத்தில முந்தைய படத்தோட ஒரு பகுதி இருந்தாதான் பின்னால் தைக்க முடியும்.

அடுத்த படத்தை பாவம் மென்பொருள் கொஞ்சம் உதவி பண்ணலாமேன்னு சரியா சூப்பர் இம்போஸ் பண்ணி எடுத்துட்டேன். இப்படியே 6 க்ளிக் க்ளிக்கியாச்சு.

பொத்தானை அமுக்கி வெளியே வந்துட்டேன்.
அதிக பயன்படுத்தாத விண்டோஸ் ஐ திறந்து கானன் மென்பொருளை நிறுவி போட்டோ ஸ்டிச் ஐ ஆரம்பிச்சாசு.

இடைமுகம் எளிதாவே இருக்கு. முதல் படத்த பாருங்க. இது ரெண்டாவது படியோட படம். எல்லா படத்தையும் தைச்சு முன்னோட்டம் காட்டுது. தேவையான க்ராப் செஞ்சுக்கலாம். அல்லாம் சரிபான்னு சொன்னதும் இறுதி படத்த போட்டு கொடுத்து சேமிக்க சொல்லிடுச்சு. ரொம்பவே எளிதான இடைமுகம்.




From 15092008

இதோட முழு படம் இங்கே இருக்கு.
http://picasaweb.google.com/agnihot3/15092008#5246222195479501122

படம் கோமணம் மாதிரி நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா இருக்கும். உலாவி தானியங்கியா இத சின்னதாக்கி காட்டும் பாக்கவே சகிக்காது.

(ப்ளாக்கிலே சரி காட்ட முடியலை. ரொம்ப நீளம். இடது பக்கம்தான் தெரியுது.)

பின்னே எப்படி பாக்கிறதாம்?
இங்கிருந்து இத தரவிறக்கி நிறுவி பாக்கலாம். இலவசம்தான்.

அல்லது முழு படத்தை உலாவிலேயே ஜூம் பண்ணி பாக்கலாம். அப்ப இட வலமா ஸ்க்ரால் பண்ண வேண்டி இருக்கும். பரவாயில்ல. கொஞ்சம் நல்லாவே இருக்கும். 3.6 எம்பி



From 15092008

முழு படம் இங்கே
http://picasaweb.google.com/agnihot3/15092008#5246223403096958018

நீங்களும் முயற்சி செய்யப்போறீங்கதானே?
பி.கு
பிட் பதிவை சுட்டரத்துக்கு தேடினா காணோம். தூக்கிட்டாங்க போல இருக்கு. :-(
பி.பி.கு
நேத்து ராத்திரி கண் விழிச்சு போட்டதாலே சில பிரச்சினைகளை கவனிக்கலே. இன்னிக்கு அதை எல்லாம் திருத்தி புதுசா போட்டாச்சு.
அப்புறம் பின்னூட்டத்திலே டெம்ப்லேட் கேட்டிருந்தேன். அப்புறமா அதிலேயே கலரெல்லாம் மாத்தியாச்சு. தேங்க்ஸ்!
வரட்டா!

6 comments:

Anand V said...

good attempt

திவாண்ணா said...

hi anand! thanks!

திவாண்ணா said...

இந்த படமெல்லாம் போட இந்த மாதிரி சிம்ப்ளா டெம்ப்ளேட் இருந்தாதான் சரியா இருக்கும் போல இருக்கு. ஆனா கலர் எதுவும் இல்லாம அவ்ளோ ருசிக்கலே :-(
யாராச்சும் நல்ல டெம்ப்ளேட் பாத்தா சொல்லுங்களேன்!
போட்டோ போட நிறைய இடம் வேணும்.
இப்ப இருக்கறா மாதிரியே கொஞ்சம் கலரோட இருக்கலாம்.

திவாண்ணா said...

பிட்லே அந்த பக்கம் திரும்பி வந்தாச்சு! இதோ தொடுப்பு http://photography-in-tamil.blogspot.com/2008/09/panoramic-photographs.html

Deepa said...

அருமையா இருக்கு திவா.
இப்படியே வகுப்புக்கு வந்து ஹோம்வர்க் எல்லாம் பண்ணுங்க..

saw the complete pic... awesome.
attempt, .. rewarded well

திவாண்ணா said...

// அருமையா இருக்கு திவா.
இப்படியே வகுப்புக்கு வந்து ஹோம்வர்க் எல்லாம் பண்ணுங்க..//

நன்றி அக்கா!

// saw the complete pic... awesome.
attempt, .. rewarded well//

தேங்க்ஸ்!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers