Tuesday, October 14, 2008

பிட் அக்டோபர் போட்டிக்கான படம்.

ம்ம்ம்.... பாத்தவங்களுக்கு சேவ் வாட்டர் படமே பிடிச்சுபோச்சு!

சரி அதையே கொஞ்சம் நல்லா ஆக்கி அனுப்பிடலாம்ன்னு முடிவு பண்ணேன்.
நிழல் வராம எடுக்கப்பாத்து கூடுதல் வெளிச்சம் கொடுத்தா, அதில தண்ணி துளி சரியா வரலை.

 
Posted by Picasa


வேற வழி தோணாம நிழலோடடேயே எடுத்து போட்டாச்சு.

மேக்ரோ மோட்லதான் பிடிச்சேன். தண்ணி விழற இடத்துக்கு போகஸ் கொஞ்சம் ட்ரிக்கி. வெள்ளை டப்பா ஒண்ணை அங்கே வெச்சு பாதி க்ளிக்கி போகஸ் பண்ணி அப்புறம் டப்பாவை எடுத்துட்டு மீதி க்ளிக் பண்ணி படம் எடுத்தேன்.

குழாய் பழசு. அது படத்தை கெடுக்க வாய்ப்பு இருக்கு. ஆனா கருத்துப்படி அது பழசாதான் இருக்கணும். அத்னால அதை பிக்காஸால ஸாப்ட் போகஸ் செஞ்சேன். குழாய் இருக்குன்னு தெரியும் ஆனா ரொம்ப ஒண்ணும் கெடுக்காது.

அப்புறம் வாசகம். பிக்காஸால எழுதினேன்.
இதே மாதிரி இன்னொரு படமும் வெச்சுகிட்டு எத போடலாம்ன்னு குழம்பி.....

 
Posted by Picasa


....... ஈஸ்வரோ ரக்ஷதுன்னு இதையே போட்டுட்டேன்.

From சித்திரம் பேசுதடி

2 comments:

ராமலக்ஷ்மி said...

//பாத்தவங்களுக்கு சேவ் வாட்டர் படமே பிடிச்சுபோச்சு!//

எனக்கும்தான்.

//வேற வழி தோணாம நிழலோடடேயே எடுத்து போட்டாச்சு.//

ஆமா நிழல் விழாம எடுப்பது ரொம்பக் கஷ்டமாதான் இருக்கு:(!

//மேக்ரோ மோட்லதான் பிடிச்சேன்.//

நான் கூட இம்மாதப் பதிவிலே முதல் 3 படம் மேக்ரோவில்தான் பிடிச்சேன்.

//வெள்ளை டப்பா ஒண்ணை அங்கே வெச்சு பாதி க்ளிக்கி போகஸ் பண்ணி அப்புறம் டப்பாவை எடுத்துட்டு மீதி க்ளிக் பண்ணி படம் எடுத்தேன்.//

இதே முறையில்தான் வெள்ளை டவலை யூஸ் பண்ணி மழைத்துளிகளையும் பிடிச்சிருக்கீங்க:)!

//இதே மாதிரி இன்னொரு படமும் வெச்சுகிட்டு எத போடலாம்ன்னு குழம்பி.....//

தவிர்க்கவே முடியாது:)))!

//....... ஈஸ்வரோ ரக்ஷதுன்னு இதையே போட்டுட்டேன்.//

அதான் ஒரே வழி!

வெற்றி பெற வாழ்த்துக்கள் திவா!

திவாண்ணா said...

//அதான் ஒரே வழி!

வெற்றி பெற வாழ்த்துக்கள் திவா!//

அக்கா, நன்றி. ஆனா மிக நல்ல படங்கள் போட்டிலே இருக்கு. இதுக்கு போய் ஒரு இடம் கிடைக்கிறது துர்லபம்தான்.
பங்கு எடுத்துக்கிறதை மட்டுமே பாக்கிறேன். அதனால பிரச்சினை இல்லை. :-))

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers