சிலூட் இல்லே, பிரதிபலிப்பு இல்லே.
நாங்க இங்க சூரியனை பாத்து பல நாட்கள் ஆகுது. மழை வெளுத்து வாங்குது. எங்கே நிழலை தேடி போறது? ஒரு ஆல மரத்தடி அரச மரத்தடின்னு உடனே மனசில தோணினாலும் எங்க போய் படம் புடிக்கறது?
போதாகுறைக்கு இந்த ஆர்காட் வேற அப்பப்ப. மழை பெஞ்சாலும் பிரச்சினை தீரலே!
சரி ஒரு வெளக்கு/ மெழுகுவத்தி ஏத்தி வெச்சு எடுத்துடலாம்ன்னு பாத்தா ஒண்ணும் சரிப்பட்டு வரலே!
என்னடா செய்யிறதுன்னு மாடி பக்கம் போனா! நெலா காஞ்சுகிட்டு இருக்கு. பாவம் நெலா வெளிச்சம் வேஸ்டா போகுதேன்னு சில படங்கள் புடிச்சேன். அதிக நேர எக்ஸ்போஷர். அவ்வளோ நல்லா வரலே! இருந்தாலும் நானும் போட்டிலே கலந்துகிட்டேன்ன்னு இருக்க வேணாமா? காமிரா வேற பிரச்சினை. ஒரு தரம் பாட்டரி போட்டு நாலு படம் எடுத்தா அடுத்த தரம் காலிங்குது!
ஸோ, இந்த தரம் இவ்ளோதான்!
பெஸ்ட் ஆப் தி வொர்ஸ்ட் எதுன்னு சொல்லுங்க அனுப்பிடலாம்.
பி.கு: அவசரப்பட்டு சில பேர் உடனேயே போட்டிக்கு அனுப்பறங்களே, இப்படி போஸ்ட் போட்டு இருந்தா சிலூட், நிழலே காணோம், இது பிரதி பலிப்புன்னு தப்பை சொல்லி இருப்போமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
From PIT Dec 2008 |
===================================================================
From PIT Dec 2008 |
நேரே வெச்சுகிட்டா படம் பிடிக்க சுலபமா இருந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
From PIT Dec 2008 |
முதல் படத்தை போல கொஞ்சம் வேற ஆங்கிள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னிக்கு வெயில் வந்தாச்சு ! வாசல் கேட்டையே படம் பிடிச்சுடேன்! நல்லா இருக்கா மாதிரி இருக்கு :-)
From pitdec2008 |
13 திசம்பர் சேத்தது: கடேசிலே இந்த கேட்டையே அனுப்பிட்டேன். நாலு பேரை கேட்டுதான் அனுப்பி இருக்கேன்! :-))
24 comments:
முதல் படம் நல்லாரு்க்குங்க திவா.
// பி.கு: அவசரப்பட்டு சில பேர் உடனேயே போட்டிக்கு அனுப்பறங்களே, இப்படி போஸ்ட் போட்டு இருந்தா சிலூட், நிழலே காணோம், இது பிரதி பலிப்புன்னு தப்பை சொல்லி இருப்போமே!//
ம்ம்ம்
நல்ல ஐடியாதான்.
ஊக்கு விக்கிறதுக்கு நன்றி கார்திக்.
:-))
//இந்த தரம் இவ்ளோதான்!//
'தரம்' நல்லாத்தான் இருக்கு. நிலா வெளிச்சமுன்னா இந்தத் 'தரமே' அதிகம்:-)
முதல் படம் நல்லா இருக்கு.
அவசரப்பட்டு நானும் தப்பான ஒன்னை மகளுக்காக அனுப்பிட்டேன்:-)))))
முதல் படம் வித்தியாசமான முயற்சி. ஆனாலும் வாசல் கேட்டுக்கு என் வாழ்த்துக்கள்:))!. அதைத் திறந்து கொண்டு வீடு தேடி வரப் போகிறது வெற்றி!
@துளசி அக்கா
நன்றி! அப்புறமா இன்னும் ஒரு படம் போட்டுட்டேன் பாருங்க அதையும்!
@ராமலக்ஷ்மிகாரு, நன்னி. அனேகமா அதைதான் அனுப்புவேன்!
கேட் நிழல் சூப்பர்.
என் ஓல்ட் ஓல்ட் ஆல்பத்தில் எல்லாமே நிழல் படமானாலும் ஒரு நிழல் கூட இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்.
நீங்கள் நன்றாகத் தாலாட்டு பாடத்தெரிந்தவரா?
'பொறி துயில் ஆழ்த்துனர்' என்று உங்கள் அறிமுகம் பார்த்தேன்.என் சந்தேகத்தை அமர்த்துங்களேன்
கோமா அக்கா, நான் anesthetist. அதான் தமிழ்ல....... ஹிஹிஹி!
முதல் படம் நல்லா இருக்குங்க..
கேட்டும் நன்றாகவே உள்ளடுஹ்.. வாழ்த்துக்கள்
நன்றி சென்!
/ராமலக்ஷ்மி said...
முதல் படம் வித்தியாசமான முயற்சி. ஆனாலும் வாசல் கேட்டுக்கு என் வாழ்த்துக்கள்:))!. அதைத் திறந்து கொண்டு வீடு தேடி வரப் போகிறது வெற்றி!
/
என் கருத்தும் அதே
வாழ்த்துகள்
நன்றி ஐயா!
நாலு பேரிலே நாங்களும் கருத்து சொல்லவே இல்லையே?? சரி, கோமா கேட்ட அதே சந்தேகம் எனக்கும் இருந்துச்சே?
g akkaa,
grrrrrrrrrrr....
உங்கள் படங்கள் எழுத்துக்கள் அத்தனையையும் பார்த்த ஒன்றிரண்டு நிமிடங்களில் நான் பொறிதுயிலில் ஆழ்ந்து விட்டேன்.
gr grrrrrrrrrr...
//உங்கள் படங்கள் எழுத்துக்கள் அத்தனையையும் பார்த்த ஒன்றிரண்டு நிமிடங்களில் நான் பொறிதுயிலில் ஆழ்ந்து விட்டேன்.//
பீஸ் எங்கே? :-))
//gr grrrrrrrrrr...//
gர்ர்ர் ஆ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆ?
ஃபீஸா?????
நான் இன்னும் விழிக்கவே இல்லையே.
//நான் இன்னும் விழிக்கவே இல்லையே.//
அப்ப சர்டிபிகேட் எழுத வேண்டியதுதான்.
:-))
விழிக்கவே இல்லையேன்னுதானே சொன்னேன் ,விழிக்கவே மாட்டேன்னா சொன்னேன் .எஸ்...க்க்க்க்க்....கே....ப் டா சாமி
@கோமா, என்ன நீங்க?? பொறிதுயில் ஆழ்த்துநரையே பொறிதுயிலில் ஆழ்த்தறாப்போல இருக்கவேண்டாமா?? இப்படியா "எஸ்" ஆகறது??? து.கா. து.கா.னு ஓட மாட்டாங்களா??? :))))))))))))
//ஊக்கு விக்கிறதுக்கு நன்றி கார்திக்.
:-))//
இப்போத் தான் பார்த்தேன், கார்த்திக், ஊக்கு விக்கிற தொழில்தான் செய்யறீங்களா??? பரவாயில்லையே! லாபகரமா இருக்கா??? :)))))))))
கீ அக்கா இன் புல் பார்ம்! ம்ம்ம் நடக்கட்டும்!
vasu, unakku ivvalavu azhaga padam pidikka theriyuma?
kannan
azhakaa irukkaa kannan! :-)
thanks!
Post a Comment