Saturday, May 9, 2009

பிட் மே -2009 போட்டி- ஜுவாலஜி

ரொம்ப நாள் முன்னே எடுத்த பறவை...

From the bird

பக்கத்து ப்ளாட் பான்ட் ஹெரான்....

From action

லால்குடி போகிற வழியிலே வானரம்....

From action

எங்க வீட்டு பூனை...
From zoology

எல்லாத்தையும் பாத்து எத பிட் மே போட்டிக்கு அனுப்பலாம்ன்னு சொல்லுங்க.
வழக்கம் போல நீங்க சொன்ன பிறகு நான் அனுப்பறதை அனுப்பறேன்!
:-))

4 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லோருமே அப்படித்தானே திவா. நீங்க அனுப்புறதத்தான் அனுப்பப் போறீங்கன்னாலும் சின்சியரா சொல்றதை சொல்லிடுவோமே நாங்க:)!

மரத்தோட மரமா இருக்கிற வானரத்தை தேடிப் பார்க்க வேண்டியிருப்பதாலும், கம்பீரமா படபடக்கும் ஹெரான் பின்னணிக்காட்சியால் எடுபடாததாலும் முதலையும் கடைசியையும் எடுத்துக் கொண்டால்...

உங்க வீட்டுப் பூனை அசத்தலா மிரட்டுது. ஆனாலும் கூட மிரட்டலான அசத்தல் முதல் படம்தான். அதற்குத்தான் எனது வோட்டு.

திவாண்ணா said...

ராம அக்கா, தாங்கீஸ்!
வாலில்லா குருவி ஆயிடுத்தேன்னு பாக்கிறேன்.
ம்ம்ம்...

geethasmbsvm6 said...

இரண்டாவது படத்துப் பறவைகள் பெயர் ஹெரானா? ம்ம்ம்ம்ம்??? இங்கே சில பேர் மூர்ஹென் அப்படினு சொல்றாங்க. தெரியலை, முன்னேயே ஒருமுறை உங்க பதிவிலே பார்த்த நினைப்பும் இருக்கு! என்ன இருந்தாலும் செல்லம் செல்லம் தானே. பூனை நல்லா போஸ் கொடுத்திருக்கு.

எங்க வீட்டுப் பூனையை நாரத்தை மர நிழலில் தூங்கறச்சே எடுத்துருக்கோம். படம் இன்னும் கணினியிலே ஏத்தலை!

திவாண்ணா said...

மும்பை ஆசாமி ஒத்தர்தான் பாத்துட்டு இது பான்ட் ஹெரான்ன்னு சொன்னார். சரிதான். வீட்டு பக்கத்திலே தண்ணீர் தேங்கறதால்தான் வருது. தண்ணீர் போனதும் இதுகளும் காணாம போயிடும்!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers