Saturday, May 9, 2009

மென்பொருள்

ரொம்ப நாளாச்சு போஸ்ட் போட்டு.
இப்ப விசேஷமா ஒரு விஷயம் கிடச்சதாலே போடலாம்ன்னு நினைக்கிறேன்.

ஏறத்தாழ ஒரு வருஷமா பழைய புத்தகங்களை மின்னாக்க்கம் செய்கிற வேலை ஒண்ணு செஞ்சுகிட்டு இருக்கேன். பப்ளிகேஷன் காப்பி ரைட் பிரச்சினை அப்புறமா இருக்கட்டும். முதல்ல புத்தகங்களை அழிஞ்சு போகாம காப்பாத்தணும்.
என் வழி புத்தகங்களை போட்டோ பிடிக்கிறது.

இதுக்கு துணையா சில மென் பொருட்களை பயன்படுத்தறேன். பிகாசா, இர்பான் வ்யூ.
இருந்தாலும் ஒரு பிரச்சினை இருந்தது. ஒரு போட்டோவிலே 2 பக்கங்கள் வரும். இதை கையாள கொஞ்சம் பிரச்சினை. தனித்தனி பக்கமா இருக்கணும் நினைச்சோம்.
சுத்து வழியா படங்களை டூப்ளிகேட் செஞ்சு, கோப்பு எண்களை A சேத்து மாத்தி, ஒரிஜனலோட சேத்து பிகாசாலே வலது பக்கம் ஒரு க்ராப் இடது பக்கம் ஒரு க்ராப்-- கொஞ்ச பேஜாரா இருந்தது.
என் மேலே இரக்கப்பட்ட என் பிள்ளை கொஞ்சம் உதவலாமேன்னு ஒரு மென் பொருள் எழுதினார். பயன்படுத்தி சில யோசனைகள் சொன்ன பிறகு அதை இப்ப மாத்தியும் கொடுத்து இருக்கார். இப்ப சூப்பரா வேலை செய்யுது!
பையர் படிச்சது என்னவோ வேதம், சாஸ்திரம். செய்யறது என்னவோ மென் பொருளாக்கம்.

இதுக்கு பைதானும் க்யூடியும் தேவை.
நிறுவல் விளக்கமா பொதியிலே இருக்கு. இங்கே சொல்லப்போறதில்லை.
--------------------

a long time since last post.
this post is about a software to split the images process them and save.
this was necessitated by one of my passions of digitising old books.
a problem that arose was one picture carrying two pages which was a little awkward and so we needed to split it into separate pages. a work around of duplicating the pictures renaming and cropping right and left successively was avoided by this s/w.
you can rotate and correct any angulation of the book first; then split the picture; and then rotate the individual pictures if need be; crop each; discard any if unwanted; and then save the two images created.
if you want this s/w give your mail id in the comments. i wont publish it but send the 19 kb s/w to you.
in linux with qt4 it will work straight away. in windows you need to install python and qt 4 also. the instruction will come with the s/w.
------------------

நிறுவின பிறகு இயக்கினா முதல்லே கோப்பை தேர்ந்தெடுக்கச்சொல்லுது.
அடுத்து ...

From splitter

இடது பக்கம் படத்தை சாய்க்க வசதி இருக்கு. பக்கம் கோணலா வந்து இருந்தா சரி செஞ்சுக்கலாம்.
அடுத்து படத்துக்கு மேலே ஒரு ஸ்லைடர் இருக்கு. அதை நகத்தி வேண்டிய இடத்திலே வைத்து மேலே வலது பக்கம் இருக்கிற split பொத்தானை அழுத்தினா படம் இரண்டா பிரிஞ்சுடும். ஸ்லைடரை நகத்தினதை இரண்டாம் படம் காட்டுது.

From splitter

மூணாவது படத்தை பாருங்க. படம் பிரிஞ்சாச்சு.
இப்ப ஒவ்வொண்னுக்கும் தனித்தனியா சாய்க்கும் வசதி இருக்கு.
சில சமயம் படம் எடுத்தா வலது படம் ஒரு சாய்மானத்திலேயும் இடது பக்கம் ஒரு சாய்மானத்திலேயும் இருக்கும். அப்படி இருந்தா இப்ப சரி செஞ்சுக்கலாம்.
வலது பக்கமோ இடது பக்கமோ தேவையில்லாத படமாவோ (முதல் போட்டோ வலது அட்டை மட்டுமே உண்டு; அதே போல கடைசி போட்டோ இடது அட்டை மட்டுமே உண்டு.) இருந்தா அதை நீக்கிடலாம்.

ஒரிஜினல் படத்தை பாத்தா முன்னேயே செஞ்ச க்ராப் இடம் அப்படியே தேர்ந்து இருக்கிறதை பாக்கலாம். இந்த சின்ன படத்திலே தெரியலைன்னு நினைக்கிறேன். இது சரின்னா அப்படியே ஏத்துக்கலாம். இல்லைனா தேர்வு ஓரங்களை நகத்தலாம்; அல்லது புதுசா தேர்வு செய்யலாம். திருப்தி ஆன பிறகு க்ராப் பண்ணி சேமி ண்ணு கட்டளை கொடுத்தா வேலை முடிஞ்சது! சேமிச்சுட்டு அடுத்த படத்தை காட்டும்.

மென் பொருள் தேவையானவங்க மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டம் இடுங்க. பப்ளிஷ் பண்ண மாட்டேன். மென்பொருளை அனுப்பி வைக்கிறேன். 18 கேபி தான்!லினக்ஸ்லே நேரடியா வேலை பண்ணும். விண்டோஸ் ன்னா சில பொதிகளை தரவிறக்கி நிறுவணும்.

From splitter

6 comments:

Maraboor J Chandrasekaran said...

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்தில் முந்தியிருப்பச் செயல், மகன் தந்தைக்காற்றும் உதவி, இவன் மகன் என்னோற்றான் கொல் எனும் சொல்!
Like father, like son! இருவருக்கும் வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல முயற்சி. தேவைப்படுபவர்கள் பயனுற்று நிச்சயம் உங்களையும் மகனையும் வாழ்த்துவார்கள். நானும் வாழ்த்துகிறேன்:)!

திவாண்ணா said...

ரெண்டு பேருக்கும் நன்னி!

KABEER ANBAN said...

//என் வழி புத்தகங்களை போட்டோ பிடிக்கிறது.//

புத்தங்களை ஸ்கேன் செய்வது போட்டோ பிடிப்பதை விட எளிதல்லவா?
சில தடிமனான புத்தகங்கள் பிரச்சனை தரக்கூடும்.

//முதல்ல புத்தகங்களை அழிஞ்சு போகாம காப்பாத்தணும்.//

ரொம்ப நல்ல சேவை. மென்பொருள் ஆக்கம் பலருக்கும் பயனளிப்பதாகட்டும். வாழ்த்துகள்

திவாண்ணா said...

thiruthiru has left a new comment on your post "மென்பொருள்":

முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வளவு கால தாமதமாக உங்கள் பதிவைப் பார்த்து பின்னூட்டம் இடுவதற்கு. இந்த மாதிரி வசதிகள் தெரியாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக பழைய புத்தகங்களை தட்டச்சிட்டு வலையில் ஏற்றி வருகிறேன். http://thiruppul.blogspot.com http://rajamragu.spaces.live.com இரண்டிலும். தயவு செய்து அந்த மென்பொருளை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். வருடினால் (scan) அது ஏற்றுக் கொள்ளுமா? அல்லது புகைப் படங்களைத்தான் ஏற்குமா?//

ஐயா நல்வரவு. மென்பொருளை தனி மடலில் அனுப்புகிறேன்.
எந்த படமானாலும் அது ஏற்றுக்கொள்ளும். வருடினாலும் அது ஜெபெக் போல ஏதோ ஒரு பட பார்மாட்டில்தானே சேமிக்கப்படுகிறது?

ThamaraiSelvan said...

pls send me the s\w to lotusright@gmail.com
thanks in advance

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers