Friday, July 16, 2010

பல நாள் திருடன்!

எங்க வீட்டுக்கு வர திருடன் பத்தி முன்னேயே பதிவு போட்டேன். அந்த தரம் ஏமாத்திட்டாரு! இன்னிக்கு காலையிலே புடிச்சுட்டேன்!

From thirutan!

காலை துணி உலத்த போனப்ப தென்ன மரத்து மேலே ஜாலியா ஊஞ்சலாடிகிட்டு இருந்தார்! ஓஹோ, அப்படியா சமாசாரம்? கொஞ்சம் இரு வரேன்னு கீழே உடனே போய் வந்து சுட்டு தள்ளிப்பிட்டேன்!

From thirutan!

From thirutan!


அப்புறம் பாத்தா மூணு திருடங்க கூட்டணி போல இருக்கு. மத்த ரெண்டு பேரும் வந்து கத்த, சுதாரிக்கிரத்துகுள்ளே பறந்துட்டாங்க!


From thirutan!

10 comments:

ராமலக்ஷ்மி said...

ஒருநாள் பிடி பட்டே விட்டானா:))?

தென்னங்கீற்று ஊஞ்சலிலே உல்லாசமாய்.. அழகு.

நல்லாவே சுட்டுத் தள்ளியிருக்கீங்க.

geethasmbsvm6 said...

நல்லாத் தான் போஸ் கொடுத்திருக்கார். எப்படி இப்படில்லாம்??? ம்ஹும், நானும் முயன்று பார்த்துட்டேன், எல்லாம் ஓட்டமாய் ஓடிப்போகுதுங்க! :(

திவாண்ணா said...

ரா.ல அக்கா. இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம் இல்லையா? கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ் ன்னு நினைக்கிறேன்.

திவாண்ணா said...

கீ அக்கா, ஆமாம் எவ்வ்வளோ நாள் முயற்சி பண்ணி இருக்கேன்! என்னமோ நேத்து கருணை காட்டி கொஞ்ச நேரம் போஸ் கொடுத்தார்! இது ..தான் ஆ இல்லை ..தாள் ஆ ன்னு அம்பிக்கு சந்தேகம்!

geeyes said...

அழகாக இருக்கிறது ஐயா.
சில அழகான படங்களை இங்கு பார்த்தேன்; உங்களுக்கும், மற்றவருக்கும் இதோ-
http://www.tlc-systems.com/artzen2-0160.htm
ஜி.ஸன்தானம்

goma said...

பச்சை போட்டிக்கு ஏன் அனுப்பவில்லை....

திவாண்ணா said...

கோமாக்கா! அது டெக்னிகலா ந்நல்ல இல்லேஎ! பின்னால நீல வானம் வாஷ்ட் அவுட்! ஒரு சுத்து கூட தாண்டாது.
வேற படம் பாத்து போட நேரமில்லை. :-(

திவாண்ணா said...

அனுபிட்டேன்! நன்னி!

goma said...

நான் அனுப்பியிருப்பதைப் பார்த்தீர்கள் இல்லையா.....இறுதிச் சுற்றுக்கு வரும்னு நினைச்சா அனுப்பினேன்.....

திவாண்ணா said...

ஹஹஹஹஹா!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers