Wednesday, October 27, 2010

குளவி

ரெண்டு நாள் முன்னே பாத்ரூமுக்கு போனபோது ஏதோ வித்தியாசமா தோணித்து. நிமிர்ந்து பார்த்தா சுவத்து மூலையில ஏதோ புதுசா தெரிஞ்சது. கொஞ்சம் கிட்டே போய் பார்த்து குளவி கூடுன்னு கண்டு பிடிச்சேன்!
இப்ப இது தர்ம சங்கடமா இருக்கு. ஒரு குடும்பஸ்தனுக்கு இதை எல்லாம் ஒழிக்க அனுமதி இருந்தாலும் மனசு வரலியே? எனக்கு பயமில்லை. கொட்டினாலும் தாங்கிக்கலாம். அதே சமயம் மத்தவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா?
என்ன செய்யலாம்?
--
Two days back when I went to the bathroom something was strange. I looked up and found that in the corner there is a wasp nest. now I'm in a dilemma. what shall I do destroy that? Or leave it alone. I'm not afraid but others entering the toilet in not be like me.though for householders it is allowed to destroy such things I'm a bit reluctant. what shall I do?


From kuLavi

From kuLavi


From kuLavi


12 comments:

goma said...

என்ன ஒரு தர்ம சங்கடமான நிலைமை.
...என்ன செய்யப் போகிறீர்கள்...
பாத்ரூம் கதவை சாத்தி ...புகை போட்டு தேனீக்களை பொறிதுயிலில் ஆழ்த்தி,அப்படியே அள்ளிக் கொண்டு வெளியே விடுங்கள்.இதுதான் எனக்குத் தெரிந்த வழி.
எப்படி என் ஐடியா.

KABEER ANBAN said...

goma அவங்க சொல்றதுதான் சரி. அது குளவிக் கூடு மாதிரி தெரியலையே. தேன்கூடு மாதிரி இல்ல இருக்கு. கூடு பெரிசாவதற்கு முன்பே புகைப் போட்டா எல்லா ஓடி போயிடும் இல்ல மயங்கிக் கிடக்கும். வெளியே தூக்கிப் போடறதுதான் வழி

திவா said...

மத்தியானம் புகை போட்டேன். என்னால் அடுத்த ரூமிலே கூட இருக்கமுடியலை. சாயந்திரம் பாத்தா அத்தனையும் ஒரு பாதிப்பும் இல்லாம அங்கேயே இருக்கிற மாதிரித்தான் தெரியுது!

திவா said...

கபீரன்பரே, இது வேற வெரைட்டின்னு நினைக்கிறேண். சாதாரணமா குளவி செம்மண்ணால கூடு கட்டி முட்டை போட்டு போகும். கொஞ்ச நாள் கழிச்சு பூச்சி வளர்ந்து கூட்டை உடைச்சு கொண்டு வரும்; பறந்து போயிடும். அது பிரச்சினையே இல்லை. இதுவோ பாலம், பெரிய மரங்கள் இவற்றீல இப்படி தேனடை மாதிரி கட்டி சில சமயம் ஏதாவது பிரச்சினைல கலஞ்சா போகிற வருகிற எல்லாரையும் கொட்டி... தீயணைப்பு படை வந்து தீயிட்டு கொளுத்துவாங்க!

goma said...

தேனிக்களுக்காக தனி பொறிதுயில் ஆழ்த்துனர் யாராவது இருந்தால் விசாரித்துப் பாருங்களேன்....

திவா said...

@goma
:-))))))

geethasmbsvm6 said...

குளவி தான் இது. மண் கூடு கட்டும் குளவி, இந்தவகைக்குளவி வாழை மரத்திலும் கட்டும். பார்க்கத் தேன்கூடு மாதிரியே அடுக்கடுக்காய்த் தான் இருக்கும். நாங்க உடைக்கிறதில்லை. எங்க வீட்டிலே குளவி கூடு கட்டாத இடம்னு தேடிப்பிடிக்கணும் சில சமயம். இப்போக்கொஞ்சம் குறைஞ்சிருக்கு!

geethasmbsvm6 said...

எல்லாம் கூட்டை உடைச்சிண்டு போயிருக்கே?? அதான் அறையெல்லாம் காலியா இருக்கு. கட்டும்போது உள்ளே புழுக்களை வைச்சுட்டுக் கையோட அறையை மூடிடும். திறந்திருக்கிறதாலே எல்லாம் பறந்திருக்கு. இனிமே தைரியமா உடைக்கலாம். அதுங்களுக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை.

geethasmbsvm6 said...

மேல் படத்திலே ஒண்ணு, ரெண்டு திறந்திருக்கு, இரண்டாம் படத்திலே அநேகமாக் காலி!

geethasmbsvm6 said...

where is the other comment???? I gave two comments(?) for this post! ellam paranthu pochunu ezuthi irunthen! :)))))

திவா said...

அத்தனையும் பப்ளிஷ் பண்ணறத்துக்குள்ளே உங்க ப்ரெண்டு ஆர்காட்டார் வந்துட்டார்!
மண்கூடு இல்லை. பேப்பர் மாதிரி ஒரு வஸ்து. இன்னிக்கு அப்புறமா படம் போடறேன். கடைசியிலே வெளியூர் போகு முன்னே கூட்டோட அஸ்திவாரத்தை இடிச்சு கீழே தள்ளிட்டு புகை போட்டுட்டு போயிட்டேன். திரும்பி வந்தப்பா எல்லாம் வேற இடம் போயிட்டாங்க.

கூடு பாதி காலி சரி, எப்ப பாத்தாலும் 10-12 குளவி இது மேல உக்காந்து இருந்தது. நாளுக்கு நாள் பெரிசாவும் ஆகிக்கொண்டும் இருந்தது. என்ன செய்யறது?

geethasmbsvm6 said...

அப்போவே எழுத நினைச்சு மறந்துட்டேன். எங்க பக்கம் (மதுரை) மண் கூடு கட்டினால் மாட்டுப்பெண்ணும், அரக்குக் கூடு கட்டினால் வீட்டில் பிறந்த பெண்ணும் குழந்தை உண்டாவாங்கனு சொல்வாங்க. தஞ்சை ஜில்லாவிலே மண்கூடுனா பெண் குழந்தைனும், அரக்குக் கூடுனா ஆண் குழந்தைனும் சொல்லுவாங்க. ரெண்டு நம்பிக்கையுமே சில சமயம் பலிச்சிருக்கு. பல சமயம் பலிச்சதும் இல்லை. மாட்டுக்கொட்டிலில் பசுவுக்குக் கிடாரிக் கன்னு பிறந்தா, வீட்டிலே ஆண்குழந்தை பிறக்கும்னும் சொல்வாங்க. கொட்டிலுக்குக் கிடாரி, தொட்டிலுக்குக் காளைனு சொல்றது உண்டு.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers