Sunday, March 20, 2011

பாரல் எபெக்ட் என்கிற பீப்பாய் தோற்றம்.


பாரல் எபெக்ட் ஐ எப்படி சரி செய்வது?
முதல்ல ஏன் அது வருது? இப்ப கதவுகளை போட்டோ எடுக்கப்போறோம். ரொம்ப கிட்டே இருந்து கொண்டு போட்டோ பிடிச்சா நடு பாகம் அகலமாகவும் மேல் கீழ் விளிம்புகள் குறுகலாகவும் இருக்கும். இது ஒரு உயரவாட்டு செவ்வகத்தை பீப்பாய் போல தோன்ற வைக்கும். இதான் பாரல் எபெக்ட்.
இதை சரி செய்ய முதல்லேயே தூரத்தில் நின்னு போட்டோ எடுக்கணும். ஆனா அது எப்போதும் சரிப்படும்ன்னு சொல்ல முடியாது. ஒரு சினிமாவிலே நாகேஷ் ஒத்தர் கால்லே விழுவார். "இன்னும் கீழே போயிருப்பேங்க; தரை வந்துடுச்சு" ம்பார். அது போல சுவரை ஒட்டி வந்தாச்சுன்னா இன்னும் எப்படி பின்னே போக முடியும்?
சரி, எடுத்ததை ஓரளவாவது சரி செய்கிற வழி முறையை பார்க்கலாம். இது என் முதல் முயற்சி என்பதால 100% சரியா வரலை. பழக்கத்திலேதான் இதுல திறமை வரும். கீழே இருக்கிற படத்தில கொஞ்சம் இந்த பாரல் எபெக்ட் இருக்கு. இடது பக்கம் பெட்டிக்கு வெளியே இருக்கிற இடைவெளியை பார்த்தா கண்டு பிடிக்கலாம். சரி செய்ய இதை ஒரு பிரதி எடுங்க. அதை அப்புறம் கிம்ப் மென்பொருளில திறந்துக்கலாம்.


From Barrel effect

முதல்ல இதோட மேல் பாகத்தை சரி செய்யலாம். எந்த இடம் அகலத்தில அதிகமா இருக்கோ அந்த இடம் வரை மேலிருந்து தேர்வு செய்யுங்க. இதுக்கு டூல்ஸ்>செலக்ஷன் டூல்ஸ் > ரெக்டாங்கில் செலக்ஷன் தேர்ந்தெடுங்க. 


From Barrel effect


படத்தின் இடது மேல் மூலையில ஆரம்பிச்சு கீழே வலது பக்கம் அகலத்தில அதிகமான இடம் வரை தேர்வு செய்யுங்க.


From Barrel effect

அடுத்து வேண்டிய கருவிக்கு டூல்ஸ்> ட்ரான்ஸ்பார்ம் டூல்ஸ்> பெர்ஸ்பெக்டிவ் ன்னு தேர்ந்தெடுங்க.
.
From Barrel effect



இப்ப நாலு மூலைகளையும் காதை பிடிச்சு இழுக்கறா மாதிரி இழுத்து எல்லா விளிம்புகளையும் நேராக்கலாம். கொஞ்சம் பிசிறு தட்டினா மாதிரி இருந்தாலும் கவலைப்படாதீங்க. நேராக்கின பிறகு ட்ரான்ஸ்பார்ம் பட்டனை தட்டினா சரி செய்யப்படும்.

From Barrel effect


இதே போல கீழ் பாகத்தை தேர்ந்தெடுத்து நேராக்கலாம்.

From Barrel effect



From Barrel effect

From Barrel effect

நம்மோட கைவண்ணத்தால படத்தில வெள்ளை இடமெல்லாம் வந்தாச்சு. இதை சரியா வெட்டி எடுக்கணும்.

From Barrel effect

வெட்டிய பின் சரியாப்போச்சு. ரொம்ப கவனமா பாத்தா மேல் கீழ் பாகங்கள் கொஞ்சம் விலகி  இருக்கிறது தெரியும். தேவையானா இதையும் மூவ் டூல் வெச்சு சரி செய்யலாம். 


From Barrel effect



2 comments:

geethasmbsvm6 said...

என்னோட குட்டி ஆனையையும் இப்படி இழுத்துச் சரி பண்ணணும். ஆட்டோமேடிக் க்ராபிங்லே வருது ஐடி ப்ரொபைலிலே இழுத்து, ஆனைக்குட்டி அழ ஆரம்பிச்சுடுத்து. இப்போப் பாதி உடம்பு தான் வந்திருக்கு. இந்த ப்ரொபைலிலே மட்டும் இப்படி க்ராப்பிங் வருது. இன்னொண்ணிலே சரியா இருக்கு/. அதான் ஏன்னு புரியலை! குழப்பம்.

திவாண்ணா said...

அத இங்கே அனுப்பி வைங்க!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers