மே மாசம் இது வரை ஒரு போஸ்டும் இல்லாம போயிடுச்சு!
போகட்டும். இப்ப போட்டுடலாம்.
ஓலை சுவடிகளை தேடி திருச்சி வரை போய் வந்தேன். அங்கே பக்கத்திலே கல்லணைகிட்டே ஒரு ஜைமினி ஸாம வேத பண்டிதர் இருக்கார்; அவர்கிட்டே 150 வருடங்களாவது ஆன ஓலைகள் இருக்காம் என்று கேள்விப்பட்டு அவற்றை பாதுக்காக்க போட்டோ எடுக்கலாமான்னு கேட்டு அவரும் சரின்னு சொன்னாரா.... ஹிஹி சரி சரி.. மின்னாக்க பணிக்காக கல்லணை போனோம். காவேரிக்கு வடக்கு கரை ஓரமாகவே போனோம். கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணைன்னு பாட்டு பாடிகிட்டே போய் பாத்தா ஒரு கல்லும் காணலை. எல்லாம் வெள்ளக்காரன் வந்து அதே இடத்திலே கட்டிட்டான் போல் இருக்கு.
From kallanai |
1931 ல முடிச்சு இருக்காங்க.
கல்லணை மத்த இடங்கள் மாதிரி ஒரே ஒரு நீட்டமான அணையா இல்லை. மூணு பகுதியா ப வடிவத்தில இருக்கு. நாங்க வந்த வடக்குப்பக்கம் ஒன்னும் ஆர்பாட்டம் இல்லாம அமைதியா இருக்கு.
From kallanai |
தெற்கு பக்கம்தான் பஸ் ஸ்டாண்ட் இருக்கு. அங்கே கொஞ்சம் கச முசன்னு கூட்டம். எல்லாரும் ச்சும்மா இப்படீஈஈஈ கொஞ்சம் நடந்து போயிட்டு வராங்க. சுற்றுலாவுக்கு கொஞ்சம் டிஸபாய்ண்ட்மென்ட் தான்.
From kallanai |
From kallanai |
From kallanai |
யானைப்பூங்கான்னு சின்னதா ஒண்ணு இருக்கு. யானை அதுக்குள்ளே போகக்கூடாதாம். "யானை பூங்காவுக்குள் போகக்கூடாது" ன்னு போர்டு வெச்சு இருக்கு! நமக்கு என்ன?
From kallanai |
மீதி படங்களை பிகாஸா வலைப்பக்கங்களில பாத்து ரசியுங்க!
https://picasaweb.google.com/agnihot3/Kallanai?feat=directlink
வரட்டா?
8 comments:
குதிரை வீரன் மேல் என்ன கோபம்:)? பிகாஸாவிலும் முகம் தெரியலை! மற்ற படமெல்லாம் நன்று.
கரிகாலன் கட்டி வத்தான் கல்லணைன்னு பாட்டு பாடிகிட்டே போய் பாத்தா ஒரு கல்லும் காணலை//
கல்லணை கரிகாலன் கட்டினதே இல்லை. எப்படி இம்மாதிரி ஒரு பேச்சுக் கிளம்பினதுனும் தெரியலை. முதலில் இதை எனக்குத் தெரிவித்தது திரு வெங்கட்ராம் திவாகர் தான். கூகிளில் தேடினதில் அப்புறமாய்ச் சில, பல குறிப்புகள், ஆதாரங்கள், பதிவுகள்னு கிடைச்சது.
ஹிஹி, ஃபாலோ அப் கொடுக்கிறதுக்குள்ளே அவசரம், பப்ளிஷ் ஆயிடுச்சு. :P
ஆனைதான் அங்கே ஏற்கெனவே ஒண்ணு இருக்கே, அதான் வேண்டாம்னுட்டாங்களா?? பாவம் இல்லை?? :(
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிகாசா திறக்கவே இல்லை! ANGRY!
ஹிஹி ஒரு கோபமும் இல்லை. கார்லேந்து படம் புடிச்சுகிட்டு இருந்தேன். நிறுத்தி இறங்கி எடுக்க நேரம் இல்லை. சரியா பாத்து காமிராவை போகஸ் பண்ணவும் கார் நகரவும் சரியா இருந்தது. குதிரை வீரன் மேலே கார் ட்ரைவருக்கு கோபமோ என்னவோ! :-)
//கல்லணை கரிகாலன் கட்டினதே இல்லை. //
அட! பின்ன யார்ஹ்டான் கட்டினாங்க?
//அதான் வேண்டாம்னுட்டாங்களா?? பாவம் இல்லை?? :( //
ஆமாம். அது பாவம் தனியா நிக்குது!
Post a Comment