Friday, October 17, 2008

மழைத்துளிகள்

ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு படம் பிடிக்கணும்ன்னு காத்திருந்தேன்.
சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் காலை தோட்டத்துக்கு போன போது மழைத்துளிகள் துணி உலர்த்தும் கம்பியில அணி வகுத்தப்போல இருந்தன. அதை எப்படி போகஸ் செய்யறதுன்னு தெரியாம சரியா பிடிக்கமுடியலை. அப்புறமா தேடி எப்படின்னு தெரிஞ்ச பிறகு மழைக்காக காத்து இருந்து இன்னிக்கு படம் எடுக்க முடிஞ்சது.

முதல்ல செய்ய வேண்டியது போகஸ்ஸுக்கு தயாரிப்பு. ஒரு வெள்ளை டவலை என் அண்ணனை கம்பிக்கு கொஞ்சம் பின்னால பிடிச்சுக்கசொல்லி நாலு அடி தள்ளி நின்னு போகஸ் பண்ணேன். சும்மாவான டெமோ க்காக அதையும் படம் எடுத்தேன்.





இரண்டாம் முறை போகஸ் பண்ணிட்டு துண்டை எடுத்துட்டோம்.
க்ளிக்கியதோட ரிசல்ட்டை பாருங்க. பிக்காஸால கொஞ்சம் வெளிச்சம் சேத்து இருக்கேன்.

Posted by Picasa

11 comments:

ராமலக்ஷ்மி said...

என்ன ஒரு மெனக்கிடல்? அருமை திவா!

திவாண்ணா said...

:-))
நன்னி அக்கா!

geethasmbsvm6 said...

நல்லா இருக்கு!

goma said...

நீங்க பெரியா ஆளு....கொடியில் போட்டு,தண்ணீரையே காய வைக்கிறீங்களே...பெரிய கில்லாடி சார்...மறக்காம கிளிப் போடுங்க

goma said...

ஆமா!!!! அதுங்கெல்லாம் காஞ்ச பின்னாடி, எப்படி எடுத்து ,மடிச்சு வைப்பீங்க?????

திவாண்ணா said...

//நீங்க பெரியா ஆளு....கொடியில் போட்டு,தண்ணீரையே காய வைக்கிறீங்களே...பெரிய கில்லாடி சார்...மறக்காம கிளிப் போடுங்க//

அந்த கிளிப்பதான் பதிவுல போட்டுட்டேன். :-))

//ஆமா!!!! அதுங்கெல்லாம் காஞ்ச பின்னாடி, எப்படி எடுத்து ,மடிச்சு வைப்பீங்க?????//

அடக்கடவுளே! மறந்து போச்சே! பெரிய மழை வந்துதே, அதுல நனஞ்சுபோய் இருக்குமோ?

வடுவூர் குமார் said...

நன்றாகத்தான் இருக்கு.

நானானி said...

துண்டும் வேண்டாம் துணியும் வேண்டாம்....இயற்கைக்கு மிஞ்சிய பேக்கரவுண்ட் உண்டா?

திவாண்ணா said...

துண்டும் வேண்டாம் துணியும் வேண்டாம்....இயற்கைக்கு மிஞ்சிய பேக்கரவுண்ட் உண்டா?//

ஓ! கோமா அக்கா ப்ரெண்டுன்னு தோணுதே!
:-)))))))))))))))

goma said...

ஓ! கோமா அக்கா ப்ரெண்டுன்னு தோணுதே!
:-)))))))))))))))


அது எப்படி சார் கரெக்டா தப்பு தப்பாய் கண்டு பிடிக்கிறீங்க.
இதுலே ஒரே முகத்திலே 15 ஸ்மைல்ஸ் வேறே....

திவாண்ணா said...

எண்ணி வேற பாத்தீங்களா! இப்படி எல்லாம் பண்ணலாமான்னு எண்ணிப்பாருங்க!

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers