Saturday, May 15, 2010

மாம்பழ சீஸன்..

என்னமோ போங்க! இந்த வலைப்பூ பக்கம் எட்டியே பாக்காம இருந்துட்டு இப்ப அடுத்தடுத்து போடறதாயிடுத்து. சுடச்சுட (யாரப்பா இந்த வெய்யில் காலத்திலே சுடச்சுடன்னு சொல்லறது...) சிலதை போட்டாத்தானே ருசிக்கும். மாம்பழ சீஸன் போகிறதுக்குள்ளே போடணும்ன்னு.....
மாம்பழத்த அப்படியே சாப்பிட்டது ஒரு காலம். அப்புறமா ரீஜெண்டா கத்தியால துண்டு துண்டா பண்ணி நாசூக்கா ஸ்பூனால உள்ளே தள்ளுறது ஒரு காலம்.
இந்த மாம்பழத்தை துண்டு போடுறது கொஞ்சம் பிரச்சினையான சமாசாரங்க. சிலதை சுலபமா பண்ணலாம். சிலது கஷ்டம்.
என் அம்மா டிவி முன்னாலேயே பல மணி இருப்பாங்க. அதுவும் சமையல் ப்ரோகிராம்ன்னா அவ்வளோ இஷ்டம். வயசாயி இப்ப அதிகமா சமைக்க முடியலைன்னாலும் வித விதமா சமைக்க எப்பவும் ஆசை. சில ரெஸிபி கேட்கும் போதே இது சரியா வராதுன்னு சொல்லி ஏன்னும் சொல்லுவாங்க. சிலது கேட்ட பிறகு ஆசையை அடக்க முடியாம மெனெக்கெட்டு செஞ்சு பாத்துட்டு அப்புறம் ரெண்டு நாள் கைவலின்னு கஷ்டப்படுவாங்க.

நாலு நாள் முன்னே ஒரு மகானுபாவன் மாம்பழத்த வெட்டிச்சாப்பிட புது வழி சொன்னாராம். அதை செஞ்சு பாக்கணும்ன்னு அம்மாவுக்கு. அதை நிறைவேத்தறதுதானே நல்ல பிள்ளைக்கு அழகு! (அது நல்ல பிள்ளைக்குத்தானே? உனக்கென்ன ந்னு யாரோ முணு முணுக்கறாங்க!)
போகட்டும். இதோ முதல்ல பழத்தை சுத்தி ஒரு வெட்டுத்தீர்மானம் கொண்டு வாங்க! அரணா கயிறு போட்டப்போலே. கொட்டை வரை ஆழமா வெட்டணும்.

From mango

அப்புறம் திறக்க கஷ்டமான பாட்டில் மூடியைப் போல இரண்டு பக்கமும் பிடிச்சுகிட்டு அப்படியே எதிர் எதிர் பக்கமா கழற்றணும். இப்படி கப் போல கழன்று வந்துடும்.

From mango

From mango

அப்புறம் ஸ்பூனால ஐஸ்க்ரீமை கப்பிலேந்து சாப்பிடற மாதிரி அகழ்ந்து சாப்பிட வேண்டியதுதான்.

From mango


ஹாப்பி மேங்கோ ஈட்டிங்க்!

6 comments:

geethasmbsvm6 said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோ புதுசாச் சொல்றீங்களாக்கும்னு பார்த்தேன், இந்த வழிமுறை நம்ம வீட்டுப் பழத்துக்கு ஒத்துவராது. சாறு கொட்டிடும். கொஞ்சம் காய்வெட்டா இருந்தாச் சரிப்படும். மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்னு பாடணும் போல இருக்கு! :))))))))

வல்லிசிம்ஹன் said...

அட! அட ! அட!
மாம்பழமே ருசி. இப்படி சுலபமா வேற நறுக்கினா, ரெடி சாப்பிட.
மஞ்ச மஞ்சேர்னு என்ன அழகு.

ராமலக்ஷ்மி said...

(ஸ்மால்) பப்பாயா ஈட்டிங் இப்படி நடப்பதுண்டு:)! மேங்கோவுமா? ரைட்டு!!

goma said...

அதிலே கொஞ்சம் ஐஸ் ஜெல்லி போட்டு ஸ்கூப் பண்ணினா சூப்பரோ சூப்பர்

உங்க தோட்டத்துக் கிளிகிட்டே கேட்டா மேங்கோ கட்டிங்க்கு நிறைய ஐடியா தருமே....

அநன்யா மஹாதேவன் said...

//புதுசாச் சொல்றீங்களாக்கும்னு பார்த்தேன், இந்த வழிமுறை நம்ம வீட்டுப் பழத்துக்கு ஒத்துவராது. சாறு கொட்டிடும். கொஞ்சம் காய்வெட்டா இருந்தாச் சரிப்படும்// அதே அதே..
ஏண்டீ இப்படி எல்லாம் பண்ணி வேலையை வளர்க்கறேன்னு எங்கம்மா கிட்டே திட்டு வாங்கி குடுக்கலாம்ன்னு தானே உங்க ப்ளான்? நல்ல வேளை! கப்பும் வேண்டாம் ஸ்பூனும் வேண்டாம். நானெல்லாம் அப்புடியே சாப்பிடுவேன்.
உங்க மெத்தட்ல தோலை என்ன பண்ணுவீங்க. பேட் ஐடியா.. தோல் தான் ஹை ஃபைபர். வேணா அஷ்வின் ஜி யை கேட்டுப்பார்க்கவும். :))

திவா said...

வாங்கோ வல்லி அக்கா! என்னமோ இந்த சீசன் நெறையவே நாராயணான் கொடுக்கரார்!
@ கீதா அக்கா சாறு அதிகமான மா.பழம் ன்னா அதை அப்படியே உருட்டி நசுக்கி அப்புறம் ஒரு சின்ன ஓட்டை போட்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம். ஹிஹிஹி!
@ கோமா அக்கா ஐஸ் ஜெல்லி. ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ஆஹா! தோட்டத்து கிளி பலாக்லே எல்லாம் என் படத்தை போட்டுடீங்கன்னு டூ விட்டு இந்த பக்கமே காணோம்!
@ ர.ல அக்கா ஆமா, பப்பாளி இப்படி சாப்டு இருக்கேன். சின்னதோ பெரிசோ நினைவில்லை. அது ஒரு வயசு!
@அநந்யா அக்கா: ஆக்சுவலி தோலாலதான் இப்படி ஒரு நிகழ்வு. இந்த வாஇ பழங்களொட தோலிலே இன்னும் பால் இருந்தது. அது என் வாயை புண்ணாக்கித்து. அம்மா பழம் சாப்படறயான்னு கேட்டப்ப வேணாம்ன்னு சொன்னேன். அப்புறம்தான் இந்த ஐடியா கொடுத்தா. பழம் சின்னதா இருந்ததால மத்தபடி வெட்ட சுளுவா இல்லை.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers