மேலே படங்களை தேவையான படிக்கு மாற்றிக்கொள்ள செய்யவேண்டியன என்ன என்று பார்க்கலாம்.
நாம் எடுத்த படங்களில் ஒரு படத்துக்கு எட்டு ஓலைகள் வீதம் படம் எடுத்தோம். இவற்றை பிரிக்க வேண்டுமில்லையா?
இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள் கிம்ப்.
இந்த இலவச மென்பொருளை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்..
கணினியில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஐ துவக்கி இந்த படங்கள் இருக்கும் அடைவை திறக்கவும். அதில் இரண்டு புதிய அடைவுகள் உருவாக்கவும். ஓன்று A, மற்றது Bஎன பெயரிடவும். இது எதற்கு என்று பின்னால் தெரியவரும்.
காமிராவில் இருந்து படங்களை கணினிக்கு பிரதி எடுக்கவும்/ மாற்றவும்.
பிகாஸா போன்ற மென்பொருளால் இவை சரியாக வந்து இருக்கின்றனவா என்று சோதிக்கவும்.
ஒவ்வொரு ஓலையையும் இரண்டிரண்டாக எடுத்தோம் இல்லையா? ஆகவே போலிகளை நீக்கவும். ஒரு ஓலையை எடுத்த படங்கள் இரண்டில் நன்றாக வந்த ஒன்றை வைத்துக்கொண்டு மற்றதை நீக்கவும் .
முதல் படத்தை கிம்ப் இல் திறந்து கொள்ளுங்கள்.
From olai |
நன்கு தெரியும் படி ஜும் செய்து கொள்ளலாம்.
தேர்வு கருவியை தேர்ந்தெடுத்து கொள்ளவும். படத்தில் உள்ள எட்டு ஓலை சுவடிகளில் முதல் சுவடியை மட்டும் இப்போது பிரிக்கப்போகிறோம். முதல் ஓலையின் இடது மேல் பகுதியில் சொடுக்கியை முதலில் வைத்து வலது சொடுக்கி பொத்தானை அழுத்தியபடியே கீழ் வலது முனைக்கு வரவும். இப்போது சொடுக்கி பொத்தானை விட்டுவிடலாம். ஓலை சரியாக தேர்வு ஆகியிருக்கிறதா என்று சரி பார்க்கவும். தேவையானால் மேல் கீழ் பக்கவாட்டு விளிம்புகளை இழுத்து விடலாம், குறுக்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் நகர்த்த வேண்டிய விளிம்பின் அருகில் சொடுக்கியை கொண்டு செல்வதுதான். ஒரு பெட்டி பொல தேர்வுக்குள் தோன்றினால் அதை இழுக்கத்தயார் என பொருள். சொடுக்கியை இடது பொத்தானை அழுத்தியபடி தேவையான திசையில் நகர்த்தி சரியான தேர்வு கிடைத்தவுடன் சொடுக்கி பொத்தானை விட்டு விடவும்.
From olai |
அடுத்து சில விசைப்பலகை குறுக்கு விசைகளால் மிக வேகமாக நம் வேலையை முடிக்கலாம். கீழ் கண்ட வரிசையில் செய்க:
கண்ட்ரோல் + c =தேர்ந்தெடுத்த இடம் பிரதி எடுக்கபப்டும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + v = பிரதி எடுத்தது புதிய படமாக காட்டப்படும்.
கண்ட்ரோல் + s = சேமிக்க கட்டளை.
From olai |
இப்போது எங்கே சேமிக்க என்று கேட்கும். இதற்கு B அடைவை சுட்டவும்.
அது திறந்தபின் கோப்பின் பெயராக 0001.jpg என உள்ளிடுக. என்டர் விசையை தட்டவும்.
From olai |
அடுத்து கிம்ப் படத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கேட்கும். அது என்ன என்று புரியாவிட்டாலும் மீண்டும் என்டர் விசையை தட்டவும்.
From olai |
அடுத்து என்ன க்வாலிடியில் சேமிக்க என்று கேட்கும். இதற்கு நாம் சில சோதனைகள் செய்தே சரியான மதிப்பை உள்ளிட்ட முடியும். படம் நன்கு பெரியதாக இருந்தால், அதிக தெளிதிரனில் எடுத்து இருந்தால் 85% என்பதை அப்படியே ஒப்புக்கொள்ளலாம். இல்லை 100% என அமைக்கலாம். சரியான மதிப்பு கண்டுபிடித்துவிட்டால் அதை முன்னிருப்பாக ஆக்கிவிடலாம்.
From olai |
மதிப்பை நாம் ஒத்துக்கொண்டு என்டர் விசையை தட்டினால் படம் சேமிக்கப்படும். புதிய படம் சேமிக்கப்பட்டு பெயருடன் காட்டப்படும். இதை மூட ஆல்ட் + எஃப் 4 விசைகளை அழுத்தவும்.
From olai |
இப்போது நாம் திறந்த அசல் படம் மேலே தேர்வுடன் காணலாம். இந்த தேர்வையே கீழே நகர்த்தலாம். தேர்வின் மத்தியில் சொடுக்கிப்பிடிக்க எல்லாப்பக்கமும் அம்புக்குறி போல ஒரு சின்னம் பார்க்கலாம். சொடுக்கியை விடாமல் தேர்வை அப்படியே கீழே சரியான இடத்துக்கு - இரண்டாம் ஓலையை சுற்றி நகர்த்தவும். தேவையான படி விளிம்புகளை நகர்த்தவும்.
From olai |
From olai |
பின் மீண்டும்
கண்ட்ரோல் + c , கண்ட்ரோல் + ஷிப்ட் + v , கண்ட்ரோல் + s .
எங்கே சேமிக்க என்று கேட்கும். அனேகமாக இப்போது B அடைவை திறந்திருக்கும். அதை அப்படியே ஒப்புக்கொள்ளலாம். கோப்பின் பெயராக 0003.jpg என உள்ளிடுக. என்டர் விசையை தட்டவும்.
கோப்பு எண்ணை பாருங்கள். எல்லா ஓலைகளின் முன் பக்கத்தை மட்டுமே இப்போது பிரித்தெடுக்கிறோம் இல்லையா? இவற்றின் பின் பக்கம் இன்னும் வர வேண்டி இருக்கிறது. அதனால்தான் இப்போது ஒற்றைப்படை எண்ணாக மட்டுமே பெயரிடுகிறோம். முதல் ஓலையின் பின் பக்கம் இரண்டு என பெயரிடப்படும். இரண்டாம் ஓலையின் முன்பக்கம் கோப்பு மூன்று. அதன் பின் பக்கம் நான்கு. சரிதானே?
மீண்டும் இரு முறை என்டர் விசையை தட்டி சேமித்தபின் ஆல்ட் + எஃப் 4 விசைகளை அழுத்தி படத்தை மூடவும்.
பின் மூன்றாம் ஓலை. இதே போல எட்டும் முடிந்தபின் அசல் படத்தை மூடுங்கள். மாற்றங்களை சேமிக்கவா என்று கேட்கும். வேண்டாம் என்று சொல்லுங்கள்.
From olai |
மூடிவிட்டு எட்டு ஓலைகளின் பிம்பம் உள்ள அடுத்த படத்தை திறந்து கொள்ளவும். இப்படி திறக்க படத்தை சும்மா இழுத்து கிம்ப் சாளரத்தில் விடலாம்.
From olai |
முன் செய்தவாறே இப்போதும் செய்ய வேண்டும். படங்கள் சேமிக்கும்போது அவற்றுக்கு பெயர் 0002.jpg, 0004.jpg என இரட்டைப்படையாக வரிசையாக கொடுக்கவும். இப்படி இந்த ஒலையின் பிம்பங்கள் எல்லாம் பிரதி எடுத்து சேமித்தபின் அடைவில் 0001.jpg, முதல் 0016.jpg, வரை பதினாறு படங்கள் இருக்கும். சரிதானே?
இப்போது பி அடைவை திறந்து இந்த படங்கள் அனைத்தையும் ஒன்றாக வெட்டி அடைவு ஏ வில் ஒட்டவும்.(கண்ட்ரோல் + A ; கண்ட்ரோல் + X; கண்ட்ரோல் + V)
இது எதற்கு?
படத்தை சேமிக்கும்போது அந்த அடைவில் உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம். சுமார் இருபது கோப்புகளின் பெயர்கள் தென்படும். அதற்குமேல் ஸ்க்ரால் செய்துதான் பார்க்கவேண்டும்.
படங்களுக்கு பெயரிடும்போது கவனம் தேவை. தவறாக பெயரிடுவது எளிதில் நிகழும். அப்படி நிகழாமல் இருக்க சேமிக்கும்போது இந்த பட்டியலை பார்த்து உறுதி செய்து கொண்டு பெயரிடலாம்.
அடுத்த படத்தை கையாளும்போது 0017.jpg என்று ஆரம்பித்து பெயரிட்டுக்கொண்டு போக வேண்டும்.
எல்லாவற்றையும் இப்படி வெட்டிய பிறகு அப்படியே வண்ண பிம்பங்களாகவே வைத்துக்கொள்ளலாம்.
From olai |
இல்லை இன்னும் கோப்பு அளவை குறைக்க நினைத்தால் பிக்காசாவில் இவற்றை திறந்து பாட்ச் ப்ராசஸ் மூலம் கருப்பு வெள்ளை ஆக்கலாம்.
From olai |
தேவையானால் இர்பான் வியூவில் திறந்து ஷார்பன் செய்து கொள்ளலாம்.
From olai |
இன்னும் மேம்படுத்த முடிந்தாலும் செய்யலாம்.
எல்லா படங்களையும் இங்கே பார்க்கலாம்!
5 comments:
படிக்கும் போதே மூச்சு வாங்குது. :))) பொறுமைத் திலகம் நீங்க. கீப் இட் அப் திவாஜி.
எல்லா படங்களையும் இங்கே பார்க்கலாம்!//
Not Found
Error 404
corrected! thanks!
மிக பயனுள்ள தகவல்! நன்றி!
இங்கே
பகிர்ந்திருக்கிறேன்.
நல்லது சித்தாட்ரீம்ஸ்! பேஸ்புக் கணக்கு இல்லை. பகிந்த விஷயம் பார்க்க முடியவில்லை. அதனாலென்ன? பரவாயில்லை. நன்றி!
Post a Comment